நன்னாகையார். (பி-ம்.) 1. ‘பண்டைத்தம்’ 2. ‘செலவாசெத்து’ 6. ‘நனைந்தே’.
(ப-ரை.) தோழி--, சேறும் சேறும் என்றலின் - செல்வேம் செல்வேமென்று தலைவன் பலகாற் சொல்லியதனால், பண்டைதன்மாயம் செலவா செத்து - முன்புஅவன் கூறிய பொய்ச் செலவாக எண்ணி, மருங்கு அற்று - என் பக்கத்தி னின்றும் நீங்கி, மன்னி கழிக என்றேன் - நிலைபெற்று நீங்குக என்றேன்; அன்னோ - ஐயோ! ஆசுஆகு எந்தை யாண்டுளன் கொல்லோ - நமக்குப் பற்றுக்கோடாகிய தலைவன் எங்கே இருக்கின்றானோ! என் இடைமுலை நிறைந்து - என் நகில்களின் இடையிலுள்ள இடம்அவனது பிரிவால் அழுத என் கண்ணீரால் நிறைந்து, கருகால்வெள்குருகு மேயும் - கரிய காலையுடைய வெள்ளியநாரை உணவை உண்ணும், பெரு குளம் ஆயிற்று - பெரியகுளம் போல ஆயிற்று.
(முடிபு) என்றலின், செத்து, கழிக என்றேன்; எந்தை யாண்டுளன்கொல்லோ! என் இடைமுலை குளமாயிற்று.
(கருத்து) தலைவன் பிரிவை யான் ஆற்றேனாயினேன்.
(வி-ரை.) தலைவன் பலகால், யான் பிரிவேன் பிரிவேன் எனச்சொல்லியும் பிரியாதிருந்தான். ஒருநாள் அவன் பன்முறை அங்ஙனம்