கூறக்கேட்டுச் சிறிது வெறுப்படைந்த தலைவி சினத்தால், ‘என்னை விட்டுப் போக' என்று கூறினாள். அதுவே தலைக்கீடாகத் தலைவன் பிரிந்தான். அவன் பிரிவால் வருந்திய தலைவி கூறியது இது.
மருங்கு - கண்ணோட்டமுமாம். கழிந்து மன்னுகவென்க. என்றேனே: ஏ அசை நிலை எந்தையென்றது முறை குறித்ததன்று; உறவின் மிகுதியைக் குறித்தது. கொல்லோ: இரங்கற் பொருட்டு (நன். 420, மயிலை.) முலை யிடை யென்றது இடைமுலையெனமாறி நின்றது.
மேற்கோளாட்சி 4. கொல்லோ வென்பது இரக்கம் குறித்து வந்தது (நன். 420,மயிலை.)
5-6. ‘தன் முலையிடை தடமாம்படி தன் இரு கண்ணினீரும் வடிந்து வீழ அழுமோ வென்க; கருங்கால் .... .... .... நிறைந்தே யென்றார் பிறரும்' (சீவக. 1629, ந.)
ஒப்புமைப் பகுதி 2. மாயச்செலவு: தஞ்சை. 29.
1-3. "சேறுஞ் சேறு மென்றலிற் பலபுலந்து, சென்மி னென்றல் யானஞ் சுவலே" (நற். 229:1-2.)
4. மு. குறுந். 176:5, ஒப்பு.
5. கருங்கால் வெண்குருகு: குறுந். 303:1, ஒப்பு.
6. அழுதலால் முலையிடை குளமாதல்: "அறுகுள நிறைக்குநபோல வல்கலும், அழுதன் மேவல வாகிப், பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே" (அகநா. 11:13-5); "அழுதா டடமா கவணங் கிழையே", கண்ணீர் நிழன்மணிப்பூட், பரப்பி னிடைப்பாய்ந்து குளமாய்ப் பாலார் படாமுலையை, வருத்தி மணிநெடுங்கோட் டருவி போல வீழ்ந்தனவே" (சீவக. 1523,2944.)
கண்ணீர் நகிலில் வீழ்தல்: குறுந். 348:4-5, ஒப்பு.
5-6. "உருகி வாடியென் னுற்றது கொல்லெனக்கருகி வாடிய காமரு கோதைதன்இருக ணீரு மிடைமுலை பாய்ந்துகக்குருகு பாய்தட மாக வழுங்கொலோ" (சீவக. 1629)
(325)
(தலைவன் சிறைப்புறத்தினனாகத் தோழிக்குக் கூறுவாளாய்,"தலைவன் ஒரு நாள் என்னைப் பிரிந்திருந்தானாயின் எனக்கு அதனால்உண்டாகும் துன்பம் பலநாள் என்னை வருத்துகின்றது" என்று கூறி,இனிப் பிரிவு நேராதவண்ணம் வரைதலே தக்கதென்பதைத் தலைவிபுலப்படுத்தியது.) 326. | துணைத்த கோதைப் பணைப்பெருந் தோளினர் |
| கடலாடு மகளிர் கான லிழைத்த |
| சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி |
| ஒருநாட் டுறைவன் றுறப்பிற் |
5 | பன்னாள் வரூஉ மின்னா மைத்தே. |
என்பது சிறைப்புறம்.