பக்கம் எண் :


597


     ஒப்புமைப் பகுதி 1. சிறுவீ ஞாழல்: குறுந். 50:1; நற். 191:1.

     1-2. நண்டின் வேரளை: குறுந். 117:2-3, ஒப்பு.

     3. கடலொலிக்கு முரசொலி: பெருங். 1. 38:130.

     3-4. தலைவன் நல்குதல்: குறுந். 37:1, ஒப்பு, 327:1.

     8. வீரர் ஆர்த்தல்: குறுந். 34:5, ஒப்பு.

     4-8. அலர் ஆர்ப்பினும் பெரிது: குறுந். 393:2-6; அகநா. 36:12-23, 209:2-6, 253:3-7, 256:13-21.

(328)
  
(தலைவன் பிரிந்த காலத்து வருந்திய தலைவியைத் தோழிவற்புறுத்தினாளாக, "யான் ஆற்றுவேன்; என்கண்கள் துயிலாவாகிஅழுதன" என்று தலைவி கூறியது.)
 329.    
கான விருப்பை வேனல் வெண்பூ 
    
வளிபொரு நெடுஞ்சினை யுகுத்தலி னார்கழல்பு 
    
களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம் 
    
பிறங்குமலை யருஞ்சுர மிறந்தவர்ப் படர்ந்து 
5
பயிலிரு ணடுநாட் டுயிலரி தாகித் 
    
தெண்ணீர் நிகர்மலர் புரையும் 
    
நன்மலர் மழைக்கணிற் கெளியவாற் பனியே. 

என்பது பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறத்துந் தோழிக்கு யான்ஆற்றுவ லென்பதுபடச் சொல்லியது.

ஓதலாந்தையார்.

     (பி-ம்.) 1. ‘வேனில்’ 2. ‘சினையஞற்றலி’, ‘யுகுத்தலி னானாது’4. ‘வழங்குஞ் சிறுநெறிதாவும்’ 7. ‘மழைக்கணிக்கு’.

     (ப-ரை.) தோழி, கானம் இருப்பை - காட்டிலேவளர்ந்த இருப்பை மரத்தினது, வேனல் வெள்பூ - வேனிற்காலத்திலே மலரும் வெள்ளிய பூக்கள், வளிபொரு நெடுசினை உகுத்தலின் - காற்றால் அலைக்கப்பட்ட நெடியகொம்புகள் உதிர்ப்ப தனால், ஆர்கழல்பு - காம்பினின்றும்கழன்று, களிறு வழங்கு சிறு நெறி புதைய - களிறுகள்செல்லும் சிறிய வழி மறையும்படி, தாஅம் - பரக்கின்ற,பிறங்குமலை அரு சுரம் - விளங்கிய மலைகளையுடையகடத்தற்கு அரிய பாலைநிலத்தை, இறந்தவர் படர்ந்து - கடந்து சென்ற தலைவரை நினைந்து, பயில் இருள் நடுநாள் - பயிலுகின்ற இருளையுடைய அரையிரவில், துயில் அரிதுஆகி - துயிலல் அரியதாகி, தெள் நீர் நிகர் மலர் புரையும் -