கழார்க்கீரனெயிற்றியன் (பி-ம். கிழாற்கீரனெயிற்றியன், கிழார்க்கீரன்.) (பி-ம்.) 1. ‘புலைச்சி’, ‘புலத்தி’, 2. ‘தண்ணயத்’, 3. ‘பரூஉக்கிரி’, 7. ‘நாடே’.
(ப-ரை.) தோழி--, நலம் தகை புலைத்தி - நன்மையையும் அழகையும் உடைய வண்ணாத்தி, பசை தோய்த்துஎடுத்து - கஞ்சியிலே தோய்த்து எடுத்து, தலைபுடை போக்கி - முதல் தப்பலைத் தப்பிவிட்டு, தண் கயத்து இட்ட - தண்ணிய நீர்நிலையிலே போகட்ட, நீரில் பிரியா பரூஉதிரிகடுக்கும் - அந்நீரிலே பிரியாத பருத்த ஆடையின் முறுக்கைஒக்கும், பெரு இலை பகன்றை பொதி அவிழ் வால் பூ - பெரிய இலையையுடைய பகன்றையினது கூம்பு மலர்ந்தவெள்ளிய மலர், இன்கடு கள்ளின் - இனிய கடுமையாகியகள்ளைப் போல, மணம் இல கமழும் - நறு நாற்றமில்லாதனவாகி நாறுகின்ற, புன்கண் மாலையும் - துன்பத்தைத்தரும் மாலைக் காலமும், புலம்பும் - தனிமையும், அவர்சென்ற நாட்டு - அத்தலைவர் நம்மைப் பிரிந்து சென்றநாட்டிலே, இன்று கொல் - இல்லையோ.
(முடிபு) தோழி, மாலையும் புலம்பும் அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?
(கருத்து) மாலைக்காலமும் தனிமையும் எனக்கு வருத்தத்தை உண்டாக்குகின்றன.
(வி-ரை) தகை - தகுதியுமாம். புலைத்தி - வண்ணாத்தி. அவள்ஆடையைப் பசையில் தோய்த்தல் வழக்கம்;
| "பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைத் தூட்டிய |
| பூந்துகில்" (அகநா. 387:6-7) |
பகன்றையின் பூவை,