பக்கம் எண் :


602


    தலைவன் பிரிவினால் மாமையழியப் பசலை உண்டாதல், இந்நூல்27-ஆம் செய்யுளாலும் விளங்கும்.

    நம்மினும் சிறந்த அரும்பொருளென்றது குறிப்பு மொழி; நம்மினுஞ்சிறந்ததன்றென்னும் கிடக்கையாற் கூறியது.

    இறப்பர்கொல் என்ற ஐயம் செல்லாமையைச் சார்ந்தே நின்றது.

    ஒப்புமைப் பகுதி 1. பாலைநிலத்தில் மூங்கில் உலர்தல்: (குறுந். 180:4,396:7).

    “மழைபெயன் மறந்த கழைதிரங் கியவில்”, “மழைகரந் தொளித்தகழைதிரங் கடுக்கத்து” (அகநா. 245:5, 347:10.)

     நீரிலாரிடை: குறுந். 347:1.

    2. ஆறுசெல் வம்பலர்: குறுந். 297:3, 350:6; அகநா. 95: 8, 107:6.

    1-3. பாலைநிலத்தில் மறவர் ஆறலைத்தல்: குறுந். 283:5-7, ஒப்பு.

    4. கானம் நீந்தல்: குறுந். 350:7; அகநா. 103:10.

    5-6. நறுவடிமா: நற். 243:3; ஐங். 61:1, 213:1.

     வடுவையுடைய மாத்துத்தளிர்: “வடிக்கொண் மாஅத்து வண்டளிர்” (ஐங். 14:2.)

    6-7. மாந்தளிர் மகளிரது மேனிக்கு: “மாவின், அவிர்தளிர் புரையு மேனியர்” (முருகு. 143-4); “தேமா மேனிச் சில்வளை யாயம்”(சிறுபாண். 176); “கழிகவி னிளமாவின் றளிரன்னாய்” (கலி. 57:13);“வளங்கெழு மாவி னிளந்தளி ரன்ன, நயத்தகு மேனியும்”, “மாந்தளிர்மேனியும்” (பெருங். 3. 6:83-4, 4. 13:219); “மாந்தளிரே மாமேனி”(சீவக. 652); “நறுமாவின், கொய்தளி ரன்ன நிறம்” (முத். 83);“மாந்தளிர்போல், மின்னிய மாமை விளர்ப்ப தென்னே” (தஞ்சை. 22.)

    7. மாமை பசலையால் அழிதல்: (குறுந். 27:4-5, ஒப்பு.); “பொன்னேர் பசலை யூர்தரப் பொறிவரி, நன்மா மேனி தொலைத னோக்கி” (அகநா. 229:13-4)

    8. பொருள் நம்மினுஞ் சிறந்தது: கலி. 2:19-22, 5:4-5; அகநா. 265:23.

(331)
  
(தலைவன் வரையாமல் வந்தொழுகிய காலத்தில் ஒருநாள் அவன்சிறைப்புறத்தில் நிற்பத் தலைவிக்கு, “தலைவனுக்கு நின்துயர் நிலையைக்கூறினால் என்?” என்று தோழி கூறியது.)
 332.   
வந்த வாடைச் சில்பெயற் கடைநாள் 
    
நோய்நீந் தரும்படர் தீர நீநயந்து 
    
கூறி னெவனோ தோழி நாறுயிர் 
    
மடப்பிடி தழீஇத் தடக்கை யானை 
5
குன்றச் சிறுகுடி யிழிதரு 
    
மன்ற நண்ணிய மலைகிழ வோற்கே.