பக்கம் எண் :


603


என்பது வரையாது வந்தொழுகாநின்ற காலத்துக் கிழவன் கேட்பக்கிழத்திக்குத் தோழி கூறியது.

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்.

    (பி-ம்) 3. ‘நாறுமயிர்’ 5. ‘குன்றகச்’ 6. ‘மன்றனண்ணிய’.

    (ப-ரை.) தோழி--, நாறு உயிர் மடம் பிடிதழீஇ -மணம் வீசுகின்ற மூச்சையுடைய மடப்பத்தையுடைய பெண்யானையைத் தழுவி, தட கை யானை - வளைந்த கையையுடைய யானை, குன்றம் சிறுகுடி இழிதரு மன்றம் - குன்றினிடத்துள்ள சிற்றூரின்கண் இறங்கிச் செல்லும் மன்றங்கள்,நண்ணிய மலை கிழவோற்கு - பொருந்திய மலையையுடைய தலைவனுக்கு, வந்த வாடை சில் பெயல் கடைநாள் - வாடை வந்த சிலவாகிய பெயலையுடைய நாளின்கடையாமத்தில், நோய் நீந்து அருபடர் தீர - வருத்தத்திலேதுளையும் பொறுத்தற்கரிய நின் துன்பம் தீரும் வண்ணம்,நீ நயந்து - நீ விரும்பி, கூறின் எவன் - கூறத்தகுவனவற்றைக்கூறினால் என்ன துன்பம் உளதாகும்?

     (முடிபு) தோழி, மலைகிழவோற்குப் படர்தீர நீ கூறின் எவனோ?

     (கருத்து) நினது துன்ப மிகுதியைத் தலைவனுக்கு நீயே கூறவேண்டும்.

     (வி-ரை.) நாறு உயிர் - தோன்றுகின்ற உயிர்ப்பெனலும் ஆம். பிடியைத் தழுவி யானை இழிதருவதைக் கூறியது, தலைவன் தன்னை வெளிப்படையாக வரைந்து கொள்ள வேண்டுமென்னும் குறிப்பை உணர்த்தியது.

    ஒப்புமைப் பகுதி 1. சில்பெயற் கடைநாள்: குறுந். 261:2.

    1-2. வாடை துயர் தருதல்: குறுந். 103:4, ஒப்பு. 3. நாறுயிர்: அகநா. 7:10.

    3-4. நாறுயிர் மடப்பிடி தழீஇ: அகநா. 189:4.

    5. குன்றச் சிறுகுடி: “குன்றகச் சிறுகுடி” (முருகு. 196.)

    6. மன்றம்: குறுந். 346:3. மு. குறுந். 98:1-3, ஒப்பு.

(332)
  
(தலைவியின் நோய் மிகுதியைக் கண்ட தோழி, “அறத்தொடு நின்றுதலைவனது வரவை நமர் ஏற்றுக் கொள்ளச் செய்வேன்” என்றது.)
  333.    
குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன் 
    
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை 
    
நறுந்தழை மகளி ரோப்புங் கிள்ளையொடு 
    
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன் 
5
பணிக்குறை வருத்தம் வீடத் 
    
துணியி னெவனோ தோழிநம் மறையே.