இருந்தையூர்க் கொற்றன் புலவன். (பி-ம்) 5. ‘வெற்பயனண்ணி’, ‘வெற்பனண்ணி’, ‘வெற்பன நண்ணி’.
(ப-ரை.) வார் கோல் - நீண்ட அம்பையும், வல்வில் -பல இலக்குக்களை ஒரு தொடையில் துளைக்கவிடும் வலியவில்லையும் உடைய, கானவர் தங்கை - வேட்டுவருடையதங்கையாகிய, பெருதோள் கொடிச்சி - பெரிய தோளையுடைய குறிஞ்சிநில மகளாகிய தலைவி, இருந்த ஊர் -வாழும் ஊர், நிரை வளை முன்கை - வரிசையாகிய வளையையுடைய முன்கையையும், நேர் இழை மகளிர் - நேர்ந்தஅணிகலன்களையுமுடைய மகளிர், இரு கல் வியல் அறை -கரிய மலையிலுள்ள அகன்ற பாறையினிடத்து, செ தினைபரப்பி - சிவந்த தினையைப் பரப்பி, சுனை பாய்சோர்வுஇடை நோக்கி - சுனையின்கண் பாய்கின்ற சோர்தலையுடைய சமயத்தைப் பார்த்து, சினையிழிந்து - மரக்கிளை