பக்கம் எண் :


607


யினின்றும் இறங்கி, பசு கண் மந்தி - பசிய கண்ணையுடையபெண் குரங்குகள், பார்ப்பொடு கவரும் - குட்டிகளோடுஅத்தினையைக் கைக்கொள்ளும், வெற்பிடை நண்ணியது -மலையினிடத்தே பொருந்தியது.

     (முடிபு) கொடிச்சி இருந்த ஊர் வெற்பிடை நண்ணியது.

     (கருத்து) தலைவியை இரவுக்குறியிற்கண்டு அளவளாவுதல் அரிது.

     (வி-ரை.) நேரிழை - பொருந்திய அணிகலன் (பட். 22, ந.) வார்கோல் வல்விற் கானவர் தங்கை யென்றதில் உடம்படு புணர்த்தும் வாயிலாகக் கானவர் இயல்பையும் புலப்படுத்தினாள். வெற்பிடை நண்ணியது வென்றதனால் அடைதற்கரிய இடத்தினளென்பதையும், கொடிய கானவர் தங்கை யென்றதனால் அவர் அறியின் தீங்கு நிகழுமென்பதையும் குறிப்பித்தாள்.

     இதனால், வரைந்து கொள்வதே நன்றென்னும் தன் நினைவுகூறினாள். இஃது இரவுக்குறி மறுக்கும் வாய்பாட்டால் வரைவு கடாயது.

    ஒப்புமைப் பகுதி 1-2. பாறையில் தினையை உலர்த்துதல்: “செந்தினை யுணங்க றொகுக்கும், இன்கல் யாணர்த்தம் முறைவி னூர்க்கே” (நற். 344: 11-2.)

    4. மந்தியும் பார்ப்பும்: குறுந். 278:7.

    2-4. மந்தி பிறர் சோர்வுற்றதை யறிந்து உணவுப் பொருளைக் கவர்தல்: “காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ, நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம், கடுஞ்சூன் மந்தி கவரும்” (பெரும்பாண். 393-5.)

    6. வல்வில்: குறுந். 100:5, ஒப்பு.

     கானவர் தங்கை: குறுந். 392:5; சிறுபாண். 190; ஐங். 363:2.

    7. பெருந்தோட் கொடிச்சி: குறுந். 400:2.

    6-7. கானவர் தங்கையாகிய கொடிச்சி: “களிற்றுமுகந் திறந்த கவுளு டைப் பகழி, வானிணப் புகவிற் கானவர் தங்கை, அம்பணை மென்றோளாயிதழ் மழைக்கண், ஒல்கியற் கொடிச்சியை” (அகநா. 132:4-7.)

(335)
  
(தலைவன் இரவுக்குறி நயந்த காலத்துத் தோழி, “நீ இரவில் வருதல்தகாது; அதனால் இவள் வருந்துவள்” என்று அது மறுத்த வாய்பாட்டால்வரைவு கடாயது.)
  336.    
செறுவர்க் குவகை யாகத் தெறுவர 
    
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ 
    
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக் 
    
கடுமா நெடுந்தேர் நேமி போகிய 
5
இருங்கழி நெய்தல் போல 
    
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே.