பக்கம் எண் :


618


  
(தோழி தலைவியிடம், “நீ தலைவனுடன் செல்வதை விரும்பிமேற்கொள்வாயாக” என்றது.)
 343.   
நினையாய் வாழி தோழி நனைகவுள் 
    
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென 
    
மிகுவலி யிரும்புலிப் பகுவா யேற்றை 
    
வெண்கோடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக் 
5
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை 
    
வாடுபூஞ் சினையிற் கிடக்கும் 
    
உயர்வரை நாடனொடு பெயரு மாறே. 

என்பது தோழி, கிழத்தியை உடன்போக்கு நயப்பக் கூறியது.

ஈழத்துப் பூதன்றேவன்.

    (பி-ம்) 2. ‘அண்ணலியானை’, ‘பாய்ந்தே’ 3. ‘மிகுவலிரும்புலி’4. ‘கொளீஇய’ 7. ‘பேருமாறே’.

    (ப-ரை.) தோழி--, மிகுவலி இருபுலி பகுவாய் ஏற்றை -மிக்க வலியையுடைய பெரிய புலியினது பிளந்த வாயையுடைய ஆணானது, நனைகவுள் - மதத்தால் நனைந்தகவுளையுடைய, அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென - தலைமையையுடைய யானையினது அழகிய முகத்தின் கண்ணே பாய்ந்ததாக, வெள்கோடு செ மறு கொளீஇ -அவ்யானையின் வெள்ளிய கொம்பைத் தனது இரத்தத்தால்செவ்விய கறையைக் கொள்ளச் செய்து, விடர் முகை - பிளப்பையுடைய கன்முழையிலுள்ள, கோடை ஒற்றிய - மேல்காற்று வீழ்த்திய, கருகால் வேங்கை - கரிய அடியையுடையவேங்கை மரத்தினது, வாடு பூ சினையின் கிடக்கும் - வாடியபூவையுடைய கிளையைப் போல இறந்து கிடக்கும், உயர்வரை நாடனொடு - உயர்ந்த மலையையுடைய நாட்டையுடைய தலைவனுடன், பெயருமாறு - போகும் திறத்தை,நினையாய் - நீ எண்ணுவாயாக; வாழி - நீ வாழ்வாயாக!

     (முடிபு) தோழி, நாடனொடு பெயருமாறு நினையாய்; வாழி!

     (கருத்து) நீ தலைவனுடன் செல்லுதலே நன்று.

     (வி-ரை.) உடன்போக்கு, தலைவியின் நெஞ்சிற்கு உவந்ததன்றாதலின் அதைக் கூறுதற்குமுன் வாழ்த்தினாள். பகுவாயென்றது பாயும்பொழுது புலி யானையைக் கொல்வதற்குப் பிளந்தவாயை யுடையதாயிற்றென்றபடி. வெண்கோடு செம்மறுக்கொளீஇ யென்றது யானையின்கொம்பினாற் குத்தப்பட்டு இறந்ததைப் புலப்படுத்தியது. புலி பாய்ந்த