முகந்த கமஞ்சூன் மாமழை, மாதிர நனந்தலை புதையப் பாஅய்” (நற். 112:7-9, 347:1-2).
2. மழைநீரால் நிலம் மறைதல்: “தூஉ யன்ன துவலை துவற்றலின், தேஎந் தேறாக் கடும்பரிக் கடும்பொடு” (மலைபடு. 363-4); “மாநிலந்தோன்றாமை மலிபெய றலைஇ” (பரி. திரட்டு. 2:1).
4. பல்லோர் துஞ்சும் கங்குல்: குறுந். 6:1-3, ஒப்பு. 244:1, ஒப்பு.
பானாள்: குறுந். 94:3, ஒப்பு.
5. ஓங்கல் வெற்ப: அகநா. 18:8.
5. மு.யா.வி. 95, மேற். “துணியிரும் பௌவம்”
6. வேங்கைமலர் கமழ்தல்: குறுந். 84:4; அகநா. 118;2, 218:21,268:3-4, 365:13-4, 378:2-4, 388:6-7; புறநா. 265:2.
சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.
வேங்கைமரம் வீட்டினருகில் இருத்தல்: குறுந். 266:3.
(355)
(தலைவி தலைவனுடன் போயினபின், “என்மகள் எங்ஙனம் பாலையிற் செல்லும் ஆற்றல் பெற்றாள்?” என்று செவிலி கூறி வருந்தியது.) 356. | நிழலான் றவிந்த நீரி லாரிடைக் |
| கழலோன் காப்பக் கடுகுபு போகி |
| அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த |
| வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய |
5 | யாங்குவல் லுநள்கொ றானே யேந்திய |
| செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த |
| பாலும் பலவென வுண்ணாள் |
| கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே. |
என்பது மகட் போக்கிய செவிலித்தாய் உரைத்தது.
(மகட் போக்கிய - தலைமகள் தலைவனுடன் போதற்குக் காரண மாகிய.)
கயமன். (பி-ம். கயமனார்).
(பி-ம்.) 1. ‘நிழலான்று விரிந்த’ 4. ‘வெவ்வங்’, ‘குடித்தி’, ‘குடித்திய’7. ‘பரலும் பல’.
(ப-ரை.) ஏந்திய செ பொன் புனை கலத்து - கையிலேந்திய செம்பொன்னாலாகிய புனைந்த பாத்திரத்தில் உள்ள,அம் பொரி கலந்த - அழகிய பொரியோடு கலந்த, பாலும்பல என - பாலையும் மிக்கன என்று கூறி, உண்ணாள் - உண்ணாளாகிய, கோல் அமை குறு தொடி - திரட்சியமைந்தகுறிய வளையையணிந்த, தளிர் அன்னோள் - தளிரை ஒத்தமென்மையையுடைய என்மகள், நிழல் ஆன்று அவிந்த -