குன்றத்தின்கண், அழலான் ... என்று வேற்றுமை உருபுகள் ஈற்றினும் தொகுமாலோ வெனின், அவை ஒரு பெயரனையவாய் உருபு முதலியன ஏலாமையின், தொகை விதியால் தொக்கனவாகா; செய்யுள் விகார வகையால் தொகுக்கப்பட்டன என்க’ (நன். 362, மயிலை).
ஒப்புமைப் பகுதி 2-3 பசும்பாம்பின் சூல்: “சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல், மெல்லவே கருவிருந் தீன்று” (சீவக.53).
5. தண்வரல் வாடை: குறுந்.76:5, 110:5-6, 160:5. 4-5. உறை அழிதுளி வாடை: “கடைப் பெயல் வாடை”, “வந்த வாடைச் சில்பெயற் கடைநாள்”, “அழிதுளி கழிப்பிய வழிபெயற் கடை நாள்... வாடை”, “எல்லாந் தந்ததன் றலையும் பையென, வடந்தை துவலை தூவ”, “தண்ணென, ஆடிய விளமழைப் பின்றை, வாடை” (நற்.89:4-7, 152:5-6, 229:9-11).
3-5. வாடையாற் கரும்பின் பொதி அவிழ்தல்: “புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை, இலங்குபூங் கரும்பி னேர்கழை யிருந்த, வெண்குருகு நரல வீசும், நுண்பஃ றுவலைய”, “பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை, எஃகுறு பஞ்சித் துய்ப்பட் டன்ன, துவலை தூவல் கழிய வகல்வயல், நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக், கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர”, “கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ, ... குரங்க, ... பனிகடி கொண்ட பண்பில் வாடை” (அகநா. 13:21-4, 217:1-5, 35:12-5).
(35)
(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் அப்பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “தலைவர் முன்பு பிரியேன் என்று சூளுறவு செய்து இப்பொழுது பிரிந்துறைய, அதனால் உண்டான வருத்தத்தைப் பொறுத்துக் கொண்டு யான் இருப்பவும் நீ வருந்துதல் முறையன்று” என்று உணர்த்தியது.) 36. | துறுக லயலது மாணை மாக்கொடி |
| துஞ்சுகளி றிவருங் குன்ற நாடன் |
| நெஞ்சுகள னாக நீயலென் யானென |
| நற்றோண் மணந்த ஞான்றை மற்றவன் |
5 | தாவா வஞ்சின முரைத்தது |
| நோயோ தோழி நின்வயி னானே. |
என்பது வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளெனக் கவன்று வேறுபட்ட தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.
(பிரிய - தலைவன் பிரிய.)
பரணர். (பி-ம்) 1. ‘மாண’ 3. ‘நீயலேன்’ ‘நீயலன்’ 5. ‘தவாஅ’.
(ப-ரை.) தோழி -, துறுகல் அயலது - உருண்டைக் கல்லின் அயலில் உள்ளதாகிய, மாணை மா கொடி -