பக்கம் எண் :


85


    3. தலைவன் தலைவியின் நெஞ்சில் இருத்தல்: குறுந். 228:6, 340:7, குறள், 1128, 1130, 1204, 1205, 1218. 4. தோள் மணத்தல்: குறுந்.101:6

    5. தலைவன் வஞ்சினம் உரைத்தல் (குறுந். 53:6-7); ‘‘ஏமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி’’ (குறிஞ்சிப். 210); ‘‘எஞ்சா வஞ்சின நெஞ்சுணக் கூறி’’ (நற்.214:6); ‘‘நெஞ்சுண, அரிய வஞ்சினஞ் சொல்லியும்’’ (அகநா. 175:6-7). 4-5. தலைவன் தலைவியின் தோளை மணந்த காலத்து வஞ்சின முரைத்தல் ‘‘பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட், பிழையா வஞ்சினஞ் செய்த, கள்வன்’’ (குறுந். 318:6-8); ‘‘தோள்புதி துண்ட ஞான்றைச், சூள்’’ (அகநா. 320:13-4). 3-5. நீங்கேனென்று தலைவன் வஞ்சினமுரைத்தது; ‘‘நல்ல சொல்லி மணந்தினி, நீயே னென்ற தெவன்கொ லன்னாய்’’ (ஐங்.22:3-4); ‘‘நீங்கா வஞ்சினஞ் செய்துநத் துறந்தோர்’’ (அகநா. 378:18).

    மு. தலைவி ஆற்றாளென்று தோழி வருந்துதல் ‘‘நெஞ்சு நெகிழ் தகுந கூறி யன்புகலந், தறாஅ வஞ்சினஞ் செய்தோர் வினைபுரிந்து, திறம் வேறாக லெற்றென் றொற்றி, இனைத லான்றிசி னீயே’’ (அகநா. 267:1-4)

(36)
  
(தலைவனது பிரிவை ஆற்றாத தலைவியை நோக்கி, ‘‘தலைவர் மிக்க அன்புடையர்; அவர் சென்ற பாலைநிலத்தில் களிறு தன் பிடியை அன்போடு பாதுகாத்து நிற்கும் காட்சியைக் கண்டு நின்னைப் பாதுகாக்கும் தம் கடமையை யெண்ணி விரைவில் மீள்வர்’’ என்று கூறித் தோழி ஆற்றுவித்தது.)
 37.    
நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 
    
பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 
    
மென்சினை யாஅம் பொளிக்கும் 
    
அன்பின தோழியவர் சென்ற வாறே. 

என்பது தோழி, கடிதுவருவாரென்று ஆற்றுவித்தது.

பாலைபாடிய பெருங்கடுங்கோ.

    (பி-ம்) 1. ‘நல்கினு’; 3. ‘பிளக்கும்’, ‘பிளிக்கும்’.

    (ப-ரை.) தோழி ---, நசை பெரிது உடையர் - தலைவர் நின்பால் விருப்பம் மிக உடையவர்; நல்கலும் நல்குவர் - நல்குதலையும் செய்வர்; அவர் சென்ற ஆறு - அவர் போன வழிகள், பிடி பசி - பெண்யானையினது பசியை, களைஇய - நீக்கும்பொருட்டு, பெருகைவேழம் - பெரிய துதிக்கையையுடைய ஆண்யானை, மெல் சினை யாஅம் பொளிக்கும் - மெல்லிய கிளைகளை உடைய யாமரத்தின்