(தலைவன் வரைபொருளுக்குப் பிரிந்து நெடுங்காலமாக வாராதிருப்ப, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, ‘‘நின்னை வரைந்து கொள்ளும் பொருட்டன்றோ அவர் பொருளீட்டச் சென்றார்; அங்ஙனமிருப்ப நீ அதனை நன்றென்று கருதாமல் வருந்துவது யாதுகாரணம் பற்றி?’’ என்று வினாவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்பால் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)
38.
கான மஞ்ஞை யறையீன் முட்டை
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும்
குன்ற நாடன் கேண்மை யென்றும்
நன்றுமன் வாழி தோழி யுண்கண்
5
நீரொ டொராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே.
என்பது வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது.
கபிலர்.
(பி-ம்) 1. ‘யறையின’்; 2. ‘தகற்றல், தகறல்’.
(ப-ரை.) தோழி -, கானம் மஞ்ஞை - காட்டிலுள்ள மயிலானது, அறை ஈன் முட்டை - பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயில் ஆடும் முசுவின் குருளை உருட்டும் - வெயிலில் விளையாடும் முசுவின் குட்டி உருட்டுதற்கு