ஒளவையார் (பி-ம். அவ்வையார்). (பி-ம்) 1. ‘வெந்தெறற்’ 2. ‘பொங்கர் போந்தென’ 3. ‘மலையிடை’
(ப-ரை.) தோழி-, நம் முலையிடைமுனிநர் -நம் நகிலினிடத்துத் துயிலுதலை வெறுத்தவர், சென்ற ஆறு - பிரிந்து சென்ற வழியானது, வெ திறல் கடு வளி - வெம்மையான வலியையுடைய விரைவான காற்றானது, பொங்கர் - மரக்கிளையிலே, போந்தென - வீசுதலால், உழிஞ்சில் - வாகை மரத்தினது, நெற்று விளைவற்றல் - நெற்றினது முற்றிய வற்றலானது, ஆர்க்கும் - ஒலித்தற்கு இடமாகிய, மலை உடை அரு சுரம் - மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும், என்ப - என்று கூறுவர்.