| “போயா னளித்தலுங் கைகுவித் தேற்றபின் போற்றியன்பாற் |
| சாயாத கொங்கையின் மேலணைத் தாடஞ்சை வாணன்வெற்பா |
| காயா மலரன்ன மேனிமெய் யாகநின் கையுறையை |
| நீயாக வல்லது மாந்தழை யாக நினைந்திலளே” (தஞ்சை.129) |
என்னும் செய்யுளும் இங்கே அறிதற்குரியன.
பலகால் முயங்கினமையின் இலை குழைந்தது.
“தலைவனது மலையிலிருந்து ஆற்றினால் அடித்துக் கொணரப்பட்டகாந்தட் கிழங்கை நட்டு வளர்த்துப் போற்றி அதைக் காணும் போதெல்லாம் தலைவனைக் காண்பதாக நினைந்து ஆற்றினேன். அச்செயலை என்தாய் தடுத்திலள்” என்று தலைவி கூறினாள்.
மேற்கோளாட்சி 2-6. அவன் தமர் உவத்தலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 22, பேர.்)
மு. தலைவனைப் பெற்றவழி மகிழ்ந்து தலைவி தோழிக்கு உரைத்தது (தொல். களவு. 20, ந.).
ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.
1-2. தேவருலகத்தைப் பெறும்படி வாழ்த்துதல்: குறுந். 83:1-2, ஒப்பு.
4. முழுமுதல்: குறுந். 214:5, 255:5; முருகு. 307.
மு. ஒருவாறு ஒப்பு: குறுந். 83.
(361)
(தலைவியின் நோய் முருகனால் வந்ததெனக் கருதித் தாய் வெறியாட்டெடுத்தவிடத்துத் தோழி வெறியாடும் வேலனை நோக்கி, “தலைவி யின் நோயைப் பரிகரிக்க எண்ணி இடும் இப்பலியை அந்நோய்க்குக்காரணமாகிய தலைவனது மார்பும் உண்ணுமோ?” என்று கூறும் வாயிலாகஅறத்தொடு நின்றது.) 362. | முருகயர்ந்து வந்த முதுவாய் வேல |
| சினவ லோம்புமதி வினவுவ துடையேன் |
| பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு |
| சிறுமறி கொன்றிவ ணறுநுத னீவி |
5 | வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய |
| விண்டோய் மாமலைச் சிலம்பன் |
| ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே. |
என்பது வெறிவிலக்கித் தோழி அறத்தொடு நின்றது.
வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் (பி-ம். வேற்பற்றூர்க் கண்ணகன் கூத்தன்.) (பி-ம்.) 1. ‘வேலன்’ 2. ‘வினவுத லுடையேன்’ 3. ‘சில்லவிழடையொடு’ 7. ‘தண்டா ரகலமு’.