பக்கம் எண் :


650


     மேற்கோளாட்சி 1. கண்டோர் கேட்பத் தலைவி கூறியது ( தொல். செய். 197, பேர்.); செவிலி கேட்பத் தலைவி கூறியது. ( தொல். செய். 196, ந.)

     மு. வெறியாடுமிடத்து வேலற்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது (இறை. 16); வேலனொடு கூறுதற்கண் தலைவி உசாவியது( தொல். களவு. 24, இளம்; பொருள். 13, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. முதுவாய் வேலன்: அகநா. 388:19.

     3. சில்லவிழ் மடை: “புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி” (புறநா. 360:18.)

     4. நுதல் நீவுதல்: குறிஞ்சிப். 182; நற். 28:2, 316:6; கலித். 21:6;அகநா. 49:6, 165:9. 240:10; தமிழ் நெறி. மேற். 96.

     1-4. வேலன் சிறுமறி கொல்லல்: “சிறுகுள கருந்துபு தாய்முலை பெறாஅ, மறிகொலைப் படுத்தல் வேண்டி வெறிபுரி, ஏதில் வேலன்” (அகநா. 292:3-5.)

     5-7. அணங்கிய அகலம்: “நாடன், மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்” (அகநா. 22:2-3.)

 மு. 
“தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய  
  
 எண்ணினை கொடுத்தி யாயின்  
  
 அண்ண லாகமு முண்ணுமோ பலியே”    (தமிழ் நெறி. மேற். 104); 
  
“வண்டா ரிரும்பொழில் வல்லத்துத் தென்னற்கு மாறெதிர்ந்து  
  
 விண்டா ருடலின் மறியறுத் தூட்டி வெறியயர்ந்து  
  
 தண்டார் முருகற் றருகின்ற வேலநற் றண்சிலம்பன்  
  
 ஒண்டா ரகலமு முண்ணுங் கொலோநின் னுறுபலியே”    (பாண்டிக்.); 
  
“கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால்  
  
 வேல னயரும் வெறியாட்டுச் - சால  
  
 மடமார் மயின்முருக னன்றியே யண்ணல்  
  
 தடமார்பு முண்ணுமோ தான்”     (கிளவித்தெளிவு.) 
(362)
  
(தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, “இனியளாகிய தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாமையைத் தருவது” என்று அவனுக்குக் கூறியது.)
 363.   
கண்ணி மருப்பி னண்ண னல்லேறு  
    
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்  
    
மடக்கண் வரையா நோக்கி வெய்துற்றுப்  
    
புல்லரை யுகாஅய் வரிநிழல் வதியும்  
5
இன்னா வருஞ்சுர மிறத்தல்  
    
இனிதோ பெரும வின்றுணைப் பிரிந்தே. 

என்பது பிரிவுணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.

செல்லூர்க் கொற்றன் (பி-ம். சொல்லூர்க் கொற்றன்.)