பக்கம் எண் :


654


ஆரவாரத்தை வெளிப்படுத்தும், மருங்கில் கொண்டபலவின் - பக்கத்திற்கொண்ட பலாமரங்களையுடைய, பெரு கல் நாட -பெரிய மலையையுடைய நாடனே, நீ நயந்தோள் கண் - நின்னால் விரும்பப்பட்ட தலைவியின் கண்கள், கோடு ஈர் இலங்கு வளை நெகிழ - சங்குகளை அறுத்துச் செய்த விளங்கு கின்ற வளைகள் நெகிழாநிற்ப நாளும் - நாள்தோறும், பாடு இல - துயிலுதல் இல்லாதனவாகி, கலிழ்ந்து - கலங்கி, பனி ஆனா - நீர்த்துளியை நீங்கா.

     (முடிபு) நாட, நீ நயந்தோள் கண் பாடில; கலிழ்ந்து பனி ஆனா.

     (கருத்து) இவள் நின்னைப் பிரிந்து ஆற்றியிராள்.

     (வி-ரை.) வரைவிடை வைத்துப் பிரியக் கருதிய தலைவன் “ என் பிரிவைத் தலைவி ஆற்றுவளோ?” என்று கேட்பக் கூறியது இது. வளைநெகிழவென்றது இவள் உடல் மெலிவாளென்றபடி, கண்பாடிலவாகிக்கலிழுமென்றமையின் துயிலாமையும் துயர்மிகுதியும் உடையளாவ ளென்றபடி.

     ஏகாரங்கள் அசை நிலை.

     மேற்கோளாட்சி மு. யான் வரையுந்துணையும் ஆற்றுவளோவென்ற தலை மகற்குத் தோழி ஆற்றாளென்று கூறியது (தொல். களவு. 23, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. கோடீரிலங்குவளை: குறுந். 11:1, ஒப்பு. 2. வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு.

     3-4. அருவிக்கு முரசு: “முரசருவி யார்க்கு மலைநாடற்கு” (கம்ப. பா.); (கைந்நிலை, 5.) பி-ம். அருவிக்கு முழவு: குறுந். 78:1-2, ஒப்பு; நற். 176:9, 347: 6-7; அகநா.25: 21-2, 138: 8-9,172:2 - 4, 318: 5-6; தஞ்சை. 22. 2-6. கண் பாடில: குறுந். 5:5, ஒப்பு.

     தலைவி துயிலாமை; குறுந் ஏ 6:4, ஒப்பு. தலைவி அழுதல்: குறுந். 82:2,ஒப்பு. துயிலாமையும் கலிழ்தலும்: குறுந். 11:2, ஒப்பு. கண் பாடில பனியானா: குறுந். 357: 1-2.கண்பனி: குறுந். 348:4, ஒப்பு; ஐங். 208:5;அகநா. 359:1.

(365)
  
(காப்பு மிக்கதனால் வேறுபட்ட தலைவியின் நிலைகண்டு, “இஃதுஎக்காரணத்தால் உண்டாகியது?” என்று வினவிய செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.)
 366.    
பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்  
    
சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ  
    
வெறியாள் கூறவு மமையா ளதன்றலைப்  
    
பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த  
5
வள்ளிதழ் நீல நோக்கி யுள்ளகை  
    
பழுத கண்ண ளாகிப்  
    
பழுதன் றம்மவிவ் வாயிழை துணிவே.