மதுரை மருதன் இளநாகன். (பி-ம்.) 2. 'தொடிவழங்', 'பெறீஇ', 'பெறீஇய', 4. 'துடங்கலின்'; 5. 'லாய','யருவி'.
(ப-ரை.) (ப-ரை.) தோழி--, தொய்யல் மா மழை- நெகிழ்ச்சியை யுடைய பெரிய மழை, தொடங்கலின் - பெய்யத் தொடங்கு தலினால், அவர் நாட்டு - அத்தலைவருடைய நாட்டிலுள்ள, பூசல் ஆயம் - ஆரவாரத்தையுடைய மகளிர்திரள், புகன்று இழி அருவியின் - விரும்பி நீராடும் பொருட்டுப் புகுகின்றஅருவியினால், மண்ணுறு மணியின் தோன்றும்- கழுவப்பட்ட நீல மணியைப் போலத் தோன்றுகின்ற, தண் நறு துறு கல் - தண்ணிய நறிய குண்டுக்கற்கள், ஓங்கிய மலை - உயர்ந்த மலையை, கொடியோர் நல்காராயினும் - கொடுமையை யுடைய தலைவர் தண்ணளி செய்யாராயினும், நின் தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் - வளைகள் விளங்கும் சந்துகளையுடைய நின்தோள்கள் அழகு பெறும்வண்ணம், அவ்வந்திசின் - அங்கே வந்தாயாகி, உவக்காண் - பார்ப்பாயாக.
(முடிபு) தோழி, கொடியோர் நல்காராயினும்நின் தோள் கவின் பெறீஇயர், மலையை அவ்வந்திசின்; உவக்காண்.
(கருத்து) நீ தலைவரது மலையைக் கண்டு ஆற்றியிருப்பாயாக.