பக்கம் எண் :


682


     (வி-ரை.) தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கினாளாக, “முன்பெல்லாம் இதுகண்டு வருந்தினாயல்லை” என்ற தோழிக்குக்கூறியது இது.

    மகளிர் விழவணி கூட்டு மாலையென்றது யானும் அவரோடுவிழவணி கூட்டி மகிழ்ந்திருந்தேனென்னும் நினைவினது. மாலையோ:ஓ பிரிநிலை. மன்; கழிவிரக்கப் பொருளது. யானே: ஏ அசைநிலை. நிலம் பரந்தன்ன புன்கணென்றது அதன் பேரளவையுணர்த்தியபடி; “நிலத்தினும் பெரிதே” (குறுந். 3:1) என்று பெருமைக்கு நிலம் கூறப்படுதல் மரபு.

    புன்கண் - காமநோய் மிகுவதனால் வரும் துன்பம். புலம்பு - தலைவனைப் பிரிந்த தனிமை. அப்பொழுது அறியே னென்றமையின், இப்பொழுது அறிந்தேனென்றாளாயிற்று.

    ஒப்புமைப் பகுதி 3. வாலிழை மகளிர்: குறுந். 45:2; கலித். 119:14.

    3. பி-ம். விழவணிக் கூட்டும்: அகநா. 26:3.

    3-4. மாலையில் மகளிர் அலங்காரம் செய்து கொள்ளல்: “மாலை மணிவிளக்கங் காட்டி யிரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங் கொள்ள” (சிலப். 9:3-4.) 2-4. குறுந். 352:5-6, ஒப்பு.

(386)
  
(தலைவன் பிரிந்த காலத்தில், “நீ ஆற்றல் வேண்டும்” என்றுவற்புறுத்திய தோழிக்கு, “மாலைக்காலமும் யாமமும் எனக்குத் துன்பத்தைத் தருவனவாயின” என்று தலைவி கூறியது)
 30.    
எல்லை கழிய முல்லை மலரக்  
    
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்  
    
இரவரம் பாக நீந்தின மாயிவன்  
    
எவன்கொல் வாழி தோழி  
5
கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே. 

என்பது பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது.

கங்குல் வெள்ளத்தார்.

     (பி-ம்) 2. ‘மாலை’; 3. ‘நிறைவரம்பாக’, ‘உயிரை வரம்பாக’; 5. ‘வெள்ளக்’.

    (ப-ரை.) தோழி--, எல்லை கழிய - பகல் நீங்க, முல்லை மலர - முல்லைக் கொடிகள் மலர, கதிர் சினம்தணிந்த - சூரியனது வெப்பம் குறைந்த, கை அறு மாலையும் -செயலறுதற்குரிய மாலைக் காலத்தையும், இர வரம்பு ஆக -இராப்பொழுது எல்லையாக எண்ணி அது வருமட்டும்,நீந்தினம் ஆயின் - கடந்தோமாயின், கங்குல் வெள்ளம் -அதன்மேல் வரும் அவ்விரவின் மிகுதி, கடலினும் பெரிது -