ஒளவையார். (பி-ம். அவ்வையார்) (பி-ம்.) 1. ‘நீர்க்கால’்; 2. ‘யெற்றினும’்; 3. ‘தசாவது’; 4. ‘உமணரொழுகை’;5. ‘முழுச்சினை’.
(ப-ரை.) நீர்கால் யாத்த - நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற, நிரை இதழ் குவளை - வரிசையாகிய இதழ்களையுடைய குவளைமலரானது, கோடை ஒற்றினும் - மேல்காற்று வீசினாலும், வாடாதாகும் - வாடாததாகும்,கவணை அன்ன பூட்டு பொருது - கவணைப்போன்ற நுகத்தின் பிணிப்புப் பொருதமையால், அசா - வருந்துதலையுடைய, உமண் எருது ஒழுகை - உப்புவாணிகருடையஎருதுகள் பூட்டிய வண்டிகளின், தோடு நிரைத்தன்ன முளிசினை - தொகுதியை வரிசையாக வைத்தாற் போன்ற உலர்ந்தமரக்கிளைகளை, பிளக்கும் முன்பு இன்மையின் - பிளத்தற் ரிய வன்மை இல்லாமையால், யானை கை மடித்து உயவும் - யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற, கானமும் - பாலைநிலங்களும், நும்மொடு வரின் - நும்மோடு வந்தால், இனிய ஆம் - தலைவிக்கு இனிமை யுடையனவாகும்.
(முடிபு) குவளை வாடாதாகும்; நும்மொடு வரின் - கானமும்இனிய ஆம்.