தும்பிசேர் கீரனார் (பி-ம். தும்பிசோகினார்). (பி-ம்) (பி-ம்.) 1. ‘மணிச்சிறைத்’; 2. ‘யவர்நாட்டுத்தெண்ண’; 4. ‘கடவை’, ‘துடவைய’; 5. ‘துளிரெற’ி; 6. ‘தமராற’்; 7. ‘நிரைசேர் நுண்டேர்போல’;8. ‘மலைகிழவோற்கே’.
(ப-ரை.) அணி சிறை தும்பி - அழகிய சிறகுகளையுடைய தும்பியே, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக,நல் மொழிக்கு அச்சம் இல்லை - நல்ல மொழிகளை ஒருவர்பால்கூறுந்திறத்தில் அச்சம் இல்லை, அவர் நாடு - அத்தலைவருடய நாட்டிலுள்ள, அண்ணல் நெடு வரை சேறி ஆயின் - தலமையையுடைய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின்,ரசர் நிரை செலல் நுண் தோல் போல - அரசர்களது வரிசையாகச் செல்லுதலையுடைய நுண்ணிய கேடகங்களைப் போல,பிரசம் தூங்கும் மலைகிழ வோர்க்கு - தேனடைகள் தொங்குகின்ற மலையையுடைய தலைவரிடத்தில், கடமை மிடைந்த -கடமை மான்கள் நெருங்கிய, துடவை அம் சிறுதினை - தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையிடத்தே, துளர் எறிநுண்துகள் களைஞர் தங்கை - களைக்கொட்டை எறிவதனால்உண்டாகிய நுண்ணிய புழுதியையுடைய களையெடுப்பாருடைய தங்கையாகிய தலைவி, தமரின் தீராள் - தன் சுற்றத்தாரிடத்தினின்றும் நீங்காளாயினாள்; என்மோ - என்றுகூறுவாயாக.