வெள்ளி வீதியார். (பி-ம்.) 1. ‘வென்கண்ணே’.
(ப-ரை.) கால் பரி தப்பின - என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; நோக்கி நோக்கி கண் வாள் இழந்தன - இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன; மன்ற - நிச்சயமாக, இ உலகத்து - இந்த உலகத்தில், பிறர் - நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர், அகல் இரு விசும்பின் மீனினும் பலர் - அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.
(முடிபு) கால் பரிதப்பின; கண் வாள் இழந்தன; பிறர் பலர்.
(கருத்து) தலைவியையும் தலைவனையும் நான் கண்டேனில்லை.
(வி-ரை.) நோக்கி நோக்கி யென்றதற்கேற்ப நடந்து நடந்தென்பது வருவித்துரைக்கப்பட்டது. முதுமையை யுடையாளாதலினாலும் பாலை நிலம் நடத்தற்கு அரியதாதலினாலும் நடந்து நடந்து செவிலிக்குக் கால் ஓய்ந்தன. பரி - நடை (மதுரைக். 689, ந.) பொருள்களை நெடுநேரம் வெயிலில் கூர்ந்து நோக்கின் கண் ஒளி மழுங்குதல் இயல்பு. பாலையில் நெடுந் தூரத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்துடன் வருவாரை நோக்கி, ‘இவர் நம் மகளும் அவள் தலைவனும் போலும்’ என்று எண்ணி அவரையே