பக்கம் எண் :


99


கூர்ந்து நோக்கி அணிமையில் வர, அவரல்லரென்பதை அறிந்து பின்னும்இங்ஙனம் வருவாரை இப்படியே நோக்கி நோக்கிச் செவிலி மனம் வெறுத்தாள். அகலிரு விசும்பு - தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயம்(பெரும்பாண். 1, ந.).

    பன்மைக்கு விசும்பின்மீனைக் கூறுதல் மரபு. பிறர் - தான் கருதி நோக்குவாராகிய தலைவியும் தலைவனுமல்லாத பிறர்.

    பலரே: ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது; ஏனை ஏகாரங்கள் அசைநிலை.

    (மேற்கோளாட்சி) 1-2. வாளென்னும் உரிச்சொல் ஒளியாகிய பண்பு உணர்த்தி நின்றது (தொல். உரி. 70, இளம், 69, .).

    மு. சுரத்திடை வினாயது நிகழ்ந்த பின்னர்ச் செவிலி கூறியது. (தொல். அகத். 40, இளம்.); செவிலி கடத்திடைத் தன்னெஞ்சிற்குக் கூறியது (தொல்.அகத். 42, ந.); செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் (நம்பி. 188).

    ஒப்புமைப் பகுதி 2. 1. செவிலி நடை ஓய்தல்: “அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர், பரிமெலிந் தொழிய” (நற். 110: 6-7.).

     1-2. கூர்ந்துபார்த்தலாற் கண் ஒளி இழத்தல்: நீளிடை யத்த நோக்கி வாளற்றுக், கண்ணுங் காட்சி தௌவின” (நற். 397: 2-3); “வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கி” (புறநா. 177:2); “வாளற்றுப் புற்கென்ற கண்ணும் - அவர் வரும் வழி பார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லிய வாயின" (குறள். 1261, பரிமேல்.); “கண்ணும் வாளற்ற” (சீவக. 998); மலைபடு. 369; நற்.133:2.

     3. அகலிருவிசும்பு: பெரும்பாண். 1, 292; மதுரைக். 50, 182, 267; நெடுநல். 20; குறிஞ்சிப்.48; மலைபடு.100; கலி.102; 1; பதிற்.68:4; புறநா.2: 2-7, 8:9, 77:11; மணி.19:91; பெருங்.1.38:16, 3.12:2.

     3-4. வான்மீனைப் பன்மைக்குக் கூறுதல்: “வானத்து, மீன்கணற்றதன் சுனையே”, “வானத்து, வயங்கித் தோன்று மீனினும் ... பொலிகநுந் நாளே”, “வானத்து, வயங்குபன் மீனினும் வாழியர் பலவென” (புறநா.109: 9-10, 367: 15-8, 371: 24-5); “வானத்து, மேலாடு மீனிற் பலராவர்” (நாலடி.13)

(44)
  
(பரத்தையர்பாற் சென்ற தலைவன் விட்ட தூதுவர் தலைவியினது உடம்பாட்டை வேண்டியபொழுது, தலைவி உடம்பட்டாளென்பதை யறிந்து தோழி, “தலைவன் கொடுமை தன்னைத் துன்புறுத்தவும் அதனைப் பாராட்டாமல் உடம்படுதற்குரிய இக்குடியிற் பிறத்தல் கொடிது” என்று கூறிக் குறிப்பினால் தலைவியின் உடம்பாட்டைத் தெரிவித்தது.)