மாமலாடன் (பி-ம். மாமிலாடன்.) (பி-ம்) 3-4. ‘மன்றதெருவின்’ 4. ‘தெருவை நுண்டாது’.
(ப-ரை.) தோழி -, ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன - ஆம்பல் மலரின் வாடலையொத்த, கூம்பிய சிறகர் - குவிந்த சிறகுகளையுடைய, மனை உறை குரீஇ - வீட்டின்கண் தங்கும் குருவிகள், முன்றில் உணங்கல் மாந்தி - முற்றத்தில் உலருந் தானியங்களைத் தின்று, மன்றத்து - பொதுவிடத்தின் கணுள்ள, எருவின் நுண்தாது குடைவன ஆடி - எருவினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, இல் இறை பள்ளி - வீட்டிறப்பிலுள்ள இடத்தே, தம் பிள்ளையொடு வதியும் - தம்முடைய குஞ்சுகளோடு தங்கியிருக்கும், புன்கண் மாலையும் - பிரிந்தார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலமும், புலம்பும் - தனிமையும், அவர் சென்ற நாட்டு - அத்தலைவர் பிரிந்து சென்ற தேயத்தில், இன்றுகொல் - இல்லையோ?
(முடிபு) தோழி, அவர் சென்ற நாட்டு, மாலையும் புலம்பும் இன்று கொல்?