குன்றியனார் (பி-ம். குன்றியான், குன்றியாள்.) (பி-ம்.) 2. ‘செவ்வி’.
(ப-ரை.) ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - வெண்சிறு கடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, செ வீ மருதின் செம்மலொடு - செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு, தாஅய் - பரந்து, அவர் ஊர் - தலைவருடைய ஊரின் இடத்தில், துறை - நீர்த் துறையை, அணிந்தன்று - அழகு செய்தது; அவர் மணந்த தோள் - அவர் முன்பு அளவளாவிய என் தோள், இலங்குவளை - விளங்கும் வளையல்கள், இறை இறந்து நெகிழ - மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகிழும்படி, சாஅய் - மெலிந்து, புலம்பு அணிந்தன்று - தனிமையையே அழகாகப் பெற்றது.
(முடிபு) ஞாழல் தாஅய் அவர் ஊரில் துறையை அணிந்தன்று; அவர் மணந்ததோள் புலம்பணிந்தன்று.
(கருத்து) அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.
(வி-ரை.) சிறுவீயென்பதும் செவ்வீயென்பதும் முதற் கேற்ற அடைகள். ஞாழலின்பூச் சிறியது என்பது, “நனைமுதிர் ஞாழற் சினைமரு