பக்கம் எண் :


110


டிரள்வீ” (397:1) என்னும் இந்நூற் செய்யுளாலும் பெறப்படும். இறை - இங்கே தோட்சந்து; “வணங்கிறைப் பணைத்தோ ளெல்வளை மகளிர்”, “தொடிவிளங் கிறைய தோள்” (குறுந். 364:5, 367:2.) புலம்பு - தலைவர் சாராத தனிமையும், வளையில்லாத தனிமையும். துறை அணிந்தன்று - துறையை அழகு செய்தது (புறநா. 1:5, உரை); தோள் அணிந்தன்று - தோள் அணிந்தது. புலம்பு அணிந்தன்று என்பது குறிப்புமொழி.

    தானும் அவனும் ஒன்றுபட்டு வாழும் கற்புக்காலத்தில் அவனூரே தனதூராகவும், ‘அவரூரே’ என்று பிரித்துச் சொன்னது அவன்பால் உள்ள புலவி பற்றி. அவர் சாரும் பொருள்களுள் துறை பொலிவு பெற்றிருப்பத் தோள்மட்டும் பொலிவிழந்ததே என்பது தலைவியின் நினைவு.

    ‘அவர் ஊரிலுள்ள துறையை அணிந்தன்று’ என்றது அவன் பரத்தையரோடு அத்துறைக்கண் விளையாடினான் என்று அறிந்தமையைக் குறிப்பித்தது.

    ஒப்புமைப் பகுதி 1. சிறுவீ ஞாழல் : குறுந். 310:6, 318:2, நற். 191:1. 2.மருதினது செவ்வீ: முருகு.33-4, ந.மருதந்துறை: குறுந். 258:3-4; ஐங்.7, 31; 36:9-10; கலி. 26:13; புறநா.243. 5. தோள் மணத்தல்: குறுந். 36:4, ஒப்பு.100:7, 272:1-8, 4-5. தோள்வளை நெகிழ்தல்:குறுந். 185:2, 252:1.

(50)
(தலைவன் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்த காலத்து, அவன் விரைந்து வந்து மணந்தானல்லனென்று கவலையுற்ற தலைவிக்கு, “நானும் தாயும் தந்தையும் நின்னை அத்தலைவருக்கே மணம் செய்து கொடுக்க விரும்பியுள்ளோம். இந்த ஊரினரும் அம்பல் கூறும் வாயிலாக உங்கள் இருவரையும் சேர்த்துச் சொல்கின்றார்கள்” என்று தோழி கூறியது.)
 51.   
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்  
    
நூலறு முத்திற் காலொடு பாறித் 
    
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை  
    
யானுங் காதலென் யாயுநனி வெய்யள் 
5
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் 
    
அம்ப லூரு மவனொடு மொழிமே. 

என்பது வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவுமலிவு கூறுயது.

    (வரைவுமலிவு - மணம் செய்து கொள்ளுதற்குரிய முயற்சிகளின் மிகுதி.)

குன்றியனார் (பி-ம். குன்றியன்.)

    (பி-ம்) 1. ‘கூர் முண்முண்டகக் கூனிமாமலர்’ 3. ‘பரிக்குந்’ ‘வரிக்குந்’ 6. ‘மொழிமோ’.