பக்கம் எண் :


113


(தலைவன் வரைந்து கொள்ளுதற்குரிய முயற்சிகளைச் செய்வதையும் அதனைத் தமர் ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தலைவியை நோக்கி, “நீ வருந்துவதை யறிந்த யான் உண்மையைத் தாயர்க்கு அறிவித்தேன்; அதனால் இஃது உண்டாயிற்று” என்று தோழி உணர்த்தியது.)
 52.   
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற் 
    
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே 
    
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் 
    
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை 
5
பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே. 

என்பது வரைவுமலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, ‘முன்னாளின் அறத்தொடு (பி-ம். முன்னாளில் தான் அறத்தொடு) நின்றமை காரணத்தான் இது விளைந்தது’ என்பதுபடக் கூறியது.

பனம்பாரனார்.

    (பி-ம்) 1. ‘ஆர்கலி மிகுத்த’, ‘ஆர்கள’ 2. ‘கூரசைத் தனையையாய்’, ‘சூரசைந்தனையையாய்’ 4. விரிந்திலங்கு’ 5. ‘பரந்தனென’.

    (ப-ரை.) நரந்தம் நாறும் - நரந்தப்பூவின் மணம் கமழ்கின்ற, குவை இரு கூந்தல் -தொகுதியாகிய கரிய கூந்தலையும், நிரந்து இலங்கு வெள் பல் - வரிசையுற்று விளங்கும் வெள்ளிய பல்லையுமுடைய, மடந்தை -மடந்தையே, ஆர் களிறு மிதித்த நீர் - தன்பால் பொருந்திய யானைகள் மிதித்தமையால் உண்டாகிய பள்ளத்தில் தங்கிய நீர், திகழ் சிலம்பில் - விளங்கும் மலைப் பக்கத்திலுள்ள, சூர்நசைந் தனையையாய் - தெய்வத்தால் விரும்பப் பெற்றாளைப் போன்றவளாகி, நடுங்கல் கண்டு - நீ நம் கற்புக்கு ஏதம் வருமோவென்று அஞ்சி நடுங்குதலையறிந்து, யான் - நின் வருத்தத்தைப் பொறாத யான், இறை இறை -சிறிது சிறிதாக, பரிந்தனென் அல்லனோ - அப்பொழுதப் பொழுது இரங்கி வருந்தினேனல்லனோ?

    (முடிபு) மடந்தையே, நீ நடுங்கல் கண்டு யான் பரிந்தனென் அல்லனோ?

    (கருத்து) நின் துயர் கண்டு ஆற்றாமல் யான் அறத்தொடு நின்றேன்.

    (வி-ரை.) களிறு மிதித்த இடம் பள்ளமாதலும் அங்கே நீர் தங்குதலும், “விலங்குமலைக் கவாஅற், கரும்புநடு பாத்தியன்ன, பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே” (குறுந். 262:6-8) என்பதனாலும் உணரப்படும். சிலம்பிற் சூரென்றது மலைப் பக்கத்தில் வாழுந் தெய்வங்களை; அவர் வரையர