பக்கம் எண் :


114


மகளிரெனப்படுவர்; “சூரர மகளி ராரணங் கினரே.......... நீவர லாறே” (பழம்பாடல்), “மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய” (அகநா. 7:4) என்பவற்றைக் காண்க; சிலம்பிற்சூர் - முருகனுமாம், காப்பு மிகுதியினாலும் தாயர் வெறியாட்டெடுக்க விரும்பியதனாலும் தலைவி நடுங்கினாள். நரந்தம்: இதனை நாரத்தம்பூ வென்பர் நச்சினார்க்கினியர் (குறிஞ்சிப். 94, உரை.) ஐவகையாகப் பகுக்கப் படுவதாதலின், ‘குவையிருங் கூந்தல்’ என்றாள்; ‘குவையிருங் கூந்தல் - குவிந்த கரிய கூந்தல்’ (புறநா. 25:14, உரை.) குவையிருங் கூந்தலும் நிரந்திலங்கு வெண்பல்லும் உடைமை, தலைவி பேதைப்பருவம் நீங்கிப் பெதும்பைப் பருவம் முதிர்ந்து மணம் செய்தற்குரிய நிலையினள் என்பதை அறிவிக்கும்; குறுந்.337.

    பரிதல் - இரங்கி அறத்தொடு நிற்றல். இறை இறையென்றது பலமுறை வருந்தினமையைக் குறித்தது.

    ஏகாரங்கள் அசைநிலை.

    (மேற்கோளாட்சி) 1.மிதித்த: செய்தவென்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் காரண காரியப் பொருளில் வந்தது (தொல். வினை.37,ந.); இவ்வெச்சம் செயப்படுபொருள் விகற்பமாகும். (தொல்.வினை.36, கல்.) மு. தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம்படுதற்கண் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது. (தொல். களவு. 17, இளம்.)

    ஒப்புமைப் பகுதி 2. தெய்வமேறினார் நடுங்குதல்: (குறுந். 105:3-5); “சூருறு மஞ்ஞையி னடுங்க” (குறிஞ்சிப்.169); “சூரமை நுடக்கம்” (ஐங், 71:1); “சூருறு மஞ்ஞையின்....... அதிர்வனர் நடுங்கி” (பெருங்.1.44:22-4): “நீ கண்டனை” (திருச்சிற்.84.தஞ்சை.40, 44).

    4. குவையிருங் கூந்தல்: குறுந். 300:1. நரந்தம் நாறும் கூந்தல்: “நரந்தநா றிருங்கூந்தல்” (கலி.54:5); “விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட, நரந்தப் பல்காழ்க் கோதை” (புறநா. 302:3-4); குறுந். 272:8

    3. மு.அகநா.266:4.

(52)
(தலைவன் வரைவேனென்று உறுதிமொழி கூறிய பின்பும் நெடுங்காலம் கழிந்தது கண்டு தலைவி வருந்துதலை யறிந்த தோழி தலைவனை நோக்கி, “நீ கூறிய உறுதிமொழிகள் எம்மை வருத்தின; அவை பிறழாமல் நீ இனி விரைவில் மணந்துகொள்ள வேண்டும்” என்று கூறியது.)
 53.   
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் 
    
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் 
    
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்  
    
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன 
5
எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை  
    
நேரிறை முன்கை பற்றிச்  
    
சூரர மகளிரொ டுற்ற சூளே.