பக்கம் எண் :


129


நீர் எடுத்தற்கும் பருகுதற்கும் உணவுப்பொருள் வைத்தற்குமுரிய ஒரு கருவி (கலி. 23:9; அகந. 121:12; புறநா. 177:16). இங்கே அதனைப் போன்றமையின் உட்கைச்சிறுகுடை யென்றாள். 'முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டாற்போல' என்னும் பழமொழியொன்று இங்கே நினைத்தற்குரியது. 'முடவன் தேனிறாலிலுள்ள தேன் தன் கையில் வீழப்பெற்றுச் சுவைத்து இன்புறானாயினும் அதனைக் கண்டவளவிலே ஓரின்பம் பெற்றதுபோலத் தலைவருடைய தண்ணளி யையும் நயப்பையும் பெறேனாயினும் அவரைக் காண்டலே ஓரின்பம் தருவதென்று உவமையை விரித்துக் கொள்க. காண்டலும் : உம்மை இழிவுச்சிறப்பு. பல்காற் காண்டலும் என்பதற்கேற்பப் பல்கால் என்பது உவமைக்கும் கூட்டப்பட்டது. இனிதே:ஏகாரம் அசை நிலை.

    1. கூதளி -ஒரு மரம்; கூதளம், கூதாளம், கூதாளி: குறுந். 282:6; புறநா. 168, 380; தொல். 246.ந.

    ஒப்புமைப் பகுதி 2. இருக்கை முடவன்: 'தமக்கு உற்றது உரைக்கலாத மூத்தார்களும் பெண்டிர்களும் இருக்கை முடவரும் ' (இறை. 35, உரை).

    3. குடை: 168:2; நாலடி.289.

    1-3. தேனைக் கண்ட முடவன் அதனை விரும்பல்: "கொடுங்குன்றி னீள்குடுமி, மேற்றேன் விரும்பு முடவனைப் போல" (திருச்சிற். 151).

    5. தலைவன் நல்குதல்: குறுந். 37:1, ஒப்பு.

    5-6. தலைவனைக் காணுதலால் இன்பம் உண்டாதல்: "துனிதீர் கூட்டமொடு துன்னா ராயினும். இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்" (நற். 216: 1-2); "பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக், காணா தமையல கண்" (குறள். 1283)

(60)
  
(பரத்தையிற் பிரிந்த தலைமகனுக்குத் தூதாக வந்த பாணர் முதலியோரை நோக்கி, "தலைவன் இங்கேவந்து தலைவியோடு இன்புறானாயினும், அவனது நட்பை மனத்தால் நினைந்து அமைதியுற்றுத் தலைவி இருத்தலின் அவள் வளைகள் செறிந்தன; ஆதலின் அவன் வந்து செய்யும் குறையொன்றிலம்" என்று கூறித் தோழி வாயில் மறுத்தது.)
 61.   
தச்சன் செய்த சிறுமா வையம்  
    
ஊர்ந்தின் புறாஅ ராயினுங் கையின் 
    
ஈர்த்தின் புறூஉ மிளையோர் 
    
உற்றின் புேறெ மாயினு நற்றேர்ப் 
5
பொய்கை யூரன் கேண்மை 
    
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே. 

என்பது தோழி, தலைமகன் வாயில்கட்கு உரைத்தது.

1. தும்பிசேர்கீரன்.

    (பி-ம்) 6. புற்றனஞ்.

  
 1. 
இதனைத் தும்பிசொகிநனென்று படித்தற்கும் இடமுண்டு.