பக்கம் எண் :


131


    ஒப்புமைப் பகுதி 1-3. சிறுதேரை இளையோர் ஊராமல் ஈர்த்தல்: "தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த, ஊரா நற்றே ருருட்டிய புதல்வர்" (பெரும்பாண். 248-9). இளையோர் சிறுதேரை இழுத்தல்: "பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும், முக்காற் சிறுதேர்" (பட். 24-5); "கால்வறேர் கையி னியக்கி நடைபயிற்றா, ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல், போல வருமென் னுயிர்" (கலி. 81: 8-10); "விளையாடு சிறுதே ரீர்த்துமெய் வருந்தி, யமளித் துஞ்சும்.... புதல்வர்" (மணி. 7: 55-7); "தொழிலுடைச் சிறுபறை பூண்டுதே ரீர்த்து" (திருவாரூர் மும்மணிக். 22:2); ஆண்பாற் பிள்ளைத் தமிழ்களிலுள்ள சிறுதேர்ப் பருவத்தைப் பார்க்க.

    4. உற்றின்புறுதல்: "ஐதெமக்கம்ம மெய்தோய் நட்பே" (குறுந். 401:6).5. ஊரன் கேண்மை: குறுந். 264:4, 308:6. 4-6.ஒருவாறு ஒப்பு: குறுந்.42. 6.வளை செறிதல்: குறுந். 260:3.

(61)
  
(இயற்கைப்புணர்ச்சிக்கண் தலைவியோடு அளவளாவிய தலைவன் பிற்றைநாளில் முதல்நாட் கண்ட இடத்தில் அவளைத் தலைப்பட்டு இன்புற எண்ணித் தன் நெஞ்சை நோக்கி, "அவள் நறுமையும் மென்மையும் நன்னிறமும் உடையள்; இன்றும் அவளைப் பெறுவேம்" என்று கூறியது.)
 62.   
கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை 
    
நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ 
    
ஐதுதொடை மாண்ட கோதை போல 
    
நறிய நல்லோண் மேனி 
5
முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே. 

என்பது தலைமகன் இடந்தலைப்பாட்டின்கட் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது.

    (இடந்தலைப்பாடு - இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் மீண்டும் தலைவியை முன்னாட் கண்ட இடத்திலே சென்று தலைப்படுதல்.)

சிறைக்குடி யாந்தையார்.

    (பி-ம்) 2.நாறிணர்க், டிடைபட, டிடையிடுபு; 4.நறியணல்லோள்; 5.வாயது, முயங்குக வின்னே, முயங்குவமினியே, முயங்குக மினியே .

    (ப-ரை.) நெஞ்சே, கோடல் - காந்தள் மலரையும், எதிர்முகை பசு வீ முல்லை - தோற்றிய அரும்பிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப்பூக்களையும், நாறு இதழ் குவளையொடு - மணக்கின்ற இதழ்களையுடைய குவளைமலர்களோடு, இடைப்பட விரைஇ - இடையிடையே பொருந்தும்படி கலந்து, ஐது தொடைமாண்ட - அழகிதாகத் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட, கோதைபோல - மாலையைப்போல, நறிய நல்லோள் மேனி - நறு நாற்றத்தை