பக்கம் எண் :


134


மட்டும் போகவேண்டும்; இவளைப் பிரிந்து நான் செல்ல ஆற்றேனன்றே' என்று கூறித் தலைவன் செலவழுங்கினான். இங்ஙனம் அழுங்கியது செல்லாமலே இருத்தற்கன்று; தன் மனத்திலுள்ள பேரன்பைப் புலப்படுத்தி ஒருவகையால் அவளை ஆற்றுவித்துப் பின்பு பிரிவதே அவன் கருத்து; இதுவே புலனெறி வழக்கமென்பது, "செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்" (தொல். கற்பு. 44) என்பதனால் அறியலாகும்.

    (மேற்கோளாட்சி) மு. இன்மையது இளிவைத் தலைவன் நெஞ்சிற்குக் கூறியது; இது (பொருள் வயிற்பிரிவு) வணிகர்க்கே யுரியது (தொல். அகத். 41, ந.); தலைவியை வருகின்றாளன்றேயெனக் கூறித் தலைவன் செலவழுங்கியது (தொல். கற்பு. 5); மறுத்துரைப்பதுபோல நெஞ்சினை இளிவரல்பற்றிக் கூறியது (தொல். பொருளியல், 2, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. இல்லோர்க்கு ஈதல் இல்லை: "இருள்படு நெஞ்சத் திடும்பை தீர்க்கும், அருணன் குடைய ராயினு மீதல், பொருளில் லோர்க்கஃ தியையா தாகுதல், யானு மறிவென் மன்னே" (அகநா. 335:1-4); அகநா.231: 1-3. 1-5 இல்லோர்க்குத் துய்த்தல் இல்லை: (குறுந். 120:1); "வறியாரிருமை யறியார்" (திருச்சிற். 333). இல்லோர்க்கு ஈதலும் துய்த்தலும் இல்லை: "இசையு மின்பமு மீதலு மூன்றும், அசைவுட னிருந்தோர்க் கரும்புணர் வின்மென" (நற். 214:1-2).

    2. கைம்மிகல் :நற்.39:3; கலி.46:23, 58:7, 107:24.

    1-2."அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாயபகைவென்று பேணாரைத் தெறுதலும், புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப், பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்" (கலி. 11: 1-4). அம்மாவரிவை: புறநா. 349:5; குறள்.1107.2-3: குறுந்.347: 4-6. 3. 4.உரைத்திசினெஞ்சே: நற். 03:1.

(63)
  
(தலைவன் பிரிவை ஆற்றாமலிருந்த தலைவியை நோக்கி, "அவர் நின் துன்பத்தையறிவர்; ஆதலின் விரைவில் மீளவர்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்" என்று தலைவி கூறியது.)
 64.   
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்  
    
புன்றலை மன்ற நோக்கி மாலை 
    
மடக்கட் குழவி யணவந் தன்ன 
    
நோயே மாகுத லறிந்தும் 
5
சேயர் தோழி சேய்நாட் டோரே. 

என்பது பிரிவிடை யாற்றாமை கண்டு, வருவரெனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

    (வருவர் - தலைவர் வருவர்.)

கருவூர்க் கதப்பிள்ளை (பி-ம். கருவூர்க் கந்தப்பிள்ளை, கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்).