பக்கம் எண் :


136


    தாய்ப் பசுவிற்கும் கன்றுக்கும் உள்ள அன்பு மிகச் சிறந்ததாதலின் அது தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள அன்புக்கு உவமை கூறப்படுவதோடு, தலைவன் தலைவியருக்கு இடையிலுள்ள அன்பு, இறைவன் அடியார்க்கு இடையிலுள்ள அன்பு முதலியவற்றிற்கும் கூறப்படுதல் மரபு; "கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி" (கம்ப. குகப்.) என்று தாயன்புக்கும், "தமியர் தாமே, செல்பவென்ப.... பண்பில் கோவலர் தாய்பிரித்தியாத்த, நெஞ்சமர் குழவி போல நொந்துநொந், தின்னாமொழிது மென்ப" (அகநா. 293:9-13) என்று தலைவியின் அன்புக்கும், "கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே" (திருவா.) என்று அடியாரது அன்புக்கும் உவமையாக வருதல் காண்க.

    அறிந்தும்: உம்மை உயர்வுசிறப்பு. நாட்டோரே: ஏகாரம் அசைநிலை.

    ஒப்புமைப் பகுதி 1. பசுவின் கன்று தாயை நோக்கி அழைத்தல்: அகநா. 14: 9-11. அணவரல்: குறுந்.128:3, பரி. 1:2.

    1-4. தலைவன் வரவை எதிர்பார்க்கும் தலைவிக்குத் தாய்ப் பசுவை எதிர்பார்க்கும் கன்று: குறுந். 132: 4-6.

(64)
  
(கார்ப்பருவம் வந்ததையறிந்த தலைவி, தலைவன் வாராமையால் வருந்தி "இன்னும் நீங்கள் உயிரோடு இருக்கின்றீர்களோ வென்று கேட்பதுபோலக் கார்ப்பருவம் வந்தபின்பும் தலைவர் வந்திலர்; இனி என் செய்வேன்!" என்று தோழியிடம் வருந்திக் கூறியது.)
 65.   
வன்பரற் றெள்ளறல் பருகிய விரலைதன்  
    
இன்புறு துணையொடு மறுவந் துகளத்  
    
தான்வந் தன்றே தளிதரு தண்கார் 
    
வாரா துறையுநர் வரனசைஇ 
5
வருந்திநொந் துறைய விருந்திரோ வெனவே. 

என்பது பருவங்கண்டு அழிந்த (பி-ம். ஒழிந்த) தலைமகள் தோழிக்கு உரைத்தது.

கோவூர் கிழார்.

    (பி-ம்) 1. வன்பாற்; 2. மருவந்து; 3.களிதரு; 4-5.வருந்தி, நோநொந்துறைய விருந்தினரோ; 5.விருந்தீரோ, விருந்தன்றாலெனவே, விருந்தனிரோ.

    (ப-ரை.) தோழி, வன் பரல் தெள் அறல் பருகிய - வலிய பருக்கைக் கற்களினிடத்தேயுள்ள தெளிந்த நீரைக் குடித்த, இரலை - ஆண்மான், தன் இன்புறு துணையொடு - இன்பத்தை நுகர்தற்குரிய தன்னுடைய பெண்மானோடு, மறுவந்து உகள - களிப்பினாற் சுழன்று துள்ளி விறையாடா நிற்கவும், வாராது உறையுநர் - இங்கே வாராமல் சென்ற