பக்கம் எண் :


144


தரியாமையை நின்னாட்டில் அறிந்தனையாதலின், நினக்கு ஏதம் வருமேல் இவள் உயிர் வாழ்தலின்மையையும் அறிதியென்று உணர்த்தியவாறு.

    (மேற்கோளாட்சி) 1. தாவென்னும் உரிச்சொல் வருத்தமென்னும் பொருளில் வந்தது (தொல். உரி, 48, இளம், சே, தெய்வச்; இ.வி. 282); தாவுத லென்னும் பொருளில் வந்தது (தொல். உரி. 46, ந.); கலையென்னும் பெயர் குரங்கின் ஆணிற்கும் சிறுபான்மை வந்தது (தொல்.மரபு. 46, பேர்.)

    2. குரங்கின் பெண்பால் மந்தியென்று கூறப்பட்டது (தொல். மரபு. 67, பேர்.) 2-3. பறழென்னும் இளமைப்பெயர் குரங்கிற்கு வந்தது (தொல். மரபு. 7, பேர்.)

    5-6. அசைநிலை யேகாரம் வந்தது (நன். 422, மயிலை.).

    மு. காப்பு வரையிறந்தது (தொல். களவு. 24, இளம்.).

    ஒப்புமைப் பகுதி 1. பெரும்பிறிது: குறுந். 302:3, நற்.219:3; மணி.23:28.

    3. கல்லா வன்பறழ்: குறுந். 278:1, 335:4; "கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ்", "கருவிரன் மந்திக் கல்லா வன்பார்ப்பு" (ஐங். 272:1, 280:1.) கலி. 40:15; மலைபடு. 312.

    5. நடுநாள்: அகநா.72:2, 162:6, 238:3, 292:9, புறநா.189:3.

    6. வாரல்வாழியோ: "வாரல் வாழியரைய" (அகநா. 92:5). 5-6."நடுநாள் வருதி நோகோ யானே" (நற். 256:10)

(69)
  
(தலைவியோடு இன்புற்று நீங்கும் தலைவன், "இவள் ஐம்புலனுக்கும் இன்பத்தைத் தருபவளாயினாள்; இவளைப் புகழுமாற்றியேன்" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறி மகிழ்ந்தது.)
 70.   
ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமகள்  
    
நறுந்தண் ணீர ளாரறணங் கினளே 
    
இனைய ளென்றவட் புனையள வறியேன் 
    
சிலமெல் லியவே கிளவி 
5
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே. 

என்பது புணர்ந்து நீங்குத் தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

ஓரம்போகியார் (பி-ம். ஓரம் போதியார்).

    (பி-ம்.) 5.அனைமெல்லியல், அனைமெல்லியள்யா மூயங்குங்காலே.

    (ப-ரை.) நெஞ்சே, ஒடுங்கு ஈர் ஓதி - ஒடுங்கிய நெய்ப்பையுடைய கூந்தலையும், ஒள்நுதல் - ஒள்ளிய நுதலையும் உடைய, குறுமகள் - தலைவி, நறு தண் நீரள் - மணத்தையும் தண்மையையும் உடைய தன்மையினள்;