பரணர். (பி-ம்) 1.வேயையவர்நீ, வெய்யையேநீ; 3.ஞாட்பிற், போக்கிய; 5.வேண்டுமால்.
(ப-ரை.) தோழி---, மகிழ்நன் மார்பே - தலைவனது மார்பையே, நீ வெய்யை - நீ விரும்புதலுடையை; நன்னை நறு மா கொன்று - நன்னனது காவன்மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, நாட்டில் போகிய - அவனது நாட்டினுட்புக்க, ஒன்று மொழி கோசர் போல - வஞ்சினத்தையுடைய கோசரைப் போல, சிறிது - சிறிதளவு. வன்கண் சூழ்ச்சியும் - வன்கண்மையையுடைய ஆராய்ச்சியும், வேண்டும்--; அழியல் - அதன் பொருட்டு வருந்தற்க.
(முடிபு) தோழி, நீ மகிழ் நன்மார்பே வெய்யை; சிறிது சூழ்ச்சியும் வேண்டும்; அழியல்.