விட்டகுதிரையார். (பி-ம்) (பி-ம்.) 1.விசையினன்ன, வியப்பினன்ன.
(ப-ரை.) விட்ட குதிரை விசைப்பின் அன்ன - அவிழ்த்து விடப்பட்ட குதிரை துள்ளியெழும் எழுச்சியைப் போன்ற, விசும்பு தோய் பசு கழை - வளைத்துப் பின் விட்டமையால் வானத்தைத் தோய்ந்த பசிய மூங்கிலையுடைய, குன்றம் நாடன் - குன்றத்தையுடைய நாட்டுக்குத் தலைவன், யாம் தன் படர்ந்தமை அறியான் - யாம் தன்னை நினைந்து மெலிதலை அறியானாகி, தானும்--. வேனில் ஆன் ஏறு போல - வேனிலின் வெம்மையை ஆற்றாத இடபத்தைப் போல, நம் மாண் நலம் நயந்து - நமது மாட்சிமைப்பட்ட நலத்தை விரும்பி, சாயினன் - மெலிந்தான்.
(முடிபு) நாடன் யாம் தற்படர்ந்தமையை அறியானாகி நம் நலம் நயந்து சாயினன்.
(கருத்து) தலைவன் கருத்துக்கு உடம்பட வேண்டும்.
(வி-ரை.) விட்டவென்ற உவமையடையைப் பொருளுக்கும் கூட்டி வளைத்துவிட்ட கழையென்று கொள்க. யானை மூங்கிலை உண்ணும்பொருட்டு வளைத்தலும் எதற்கேனும் அஞ்சி விடுதலும் குறிஞ்சி நிலத்து நிகழ்ச்சி; இந்நூல், 54-ஆம் செய்யுளைப் பார்க்க. விட்ட - செலுத்திய வெனலுமாம். விசைத்தல் - துள்ளுதல் (புறநா. 120:14, உரை). இங்கே உள்ள உவமையையும் பொருளையும் மாறிக் கூறினாரும் உளர்; "வெடிவேய் கொள்வது போல வோடித், தாவு புகளுமாவே" (புறநா. 302: 1-2). யாமென்றதும் நம்மென்றதும் தலைவிக்கும் தனக்கு முள்ள ஒற்றுமைபற்றி.
வேனிலின் வெம்மையால் துன்புற்று ஆனேறு, காமநோயால் துன்புற்ற தலைவனுக்கு உவமை. சாயினன் - மெலிந்தனன்; சாய்தல் -