மெலிதல் (தொல். உரி. 32) மாணலமென்றது பட்டாங்கு கூறியது. தானும்: உம்மை, இறந்தது தழீஇயது. என்ப, ஏ: அசை நிலைகள்.
தலைவன் தலைவியை மருவுதற்குரிய செவ்வியை விரும்பினானாக, "நாமும் அவனை விரும்பி நிற்கின்றோம். அவனும் இரந்து நிற்கின்றான். நாம் விரும்புவது, தானே வலிய வந்ததாதலின் மறாது உடம்படல் வேண்டும்" என்று தோழி தலைவிக்குக் கூறினாள்.
வளைக்குங்கால் வளைந்ததேனும் இயல்பில் விசும்புதோயும் உயர்வையுடைய மூங்கிலைப்போல, தலைவன் நம் மாணலம் நயந்து நம்மிடைப் பணிந்து ஒழுகினானெனினும், இயல்பாகத் தலைமையை உடையனென்பது குறிப்பு.
மூங்கில் விசைத்தெழுதலுக்கு விட்ட குதிரையின் விசைப்பை உவமை கூறிய சிறப்பினால் இச் செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர் விட்டகுதிரையார் என்னும் பெயர் பெற்றனர்.
(மேற்கோளாட்சி) மு. தலைவி பாங்கியை முனிந்தது (நம்பி. 148).
ஒப்புமைப் பகுதி 4. தலைவனுக்கு ஆனே்று உவமை: "ஆகாண் விடையினணிபெற வந்து", "துணைபுண ரேற்றி னெம்மொடு வந்து" (குறிஞ்சிப். 136, 235); 'ஏறு நாகுடனே தம்மிற் கூடி நின்றன; அவை போல நாமுங்கூடிச் சேரப்போதற்குக் கூட்டத்திற்கு உடம்படுவாயாக வென்றான்' (கலி. 113:28-9, ந.); பரி.20:62, சீவக. 751, 1523.
5. குறைவேண்டிய தலைவன் மெலிதல்: குறுந்.298: 3-4. மாணலம்: குறுந். 258:8, 299:7, 377:1; தொல். கற்பு. 9.4-5. வேனிலால் விலங்குகள் வாடுதல்: கலி.7:1; அகநா.29: 15-9.
(74)
(தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.) 75. | நீகண் டனையோ கண்டார்க்கேட் டனையோ |
| ஒன்று தெளிய நசையின மொழிமோ |
| வெண்கோட் டியானை சோணை படியும் |
| பொன்மலி பாடலி பெறீஇயர் |
5 | யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. |
என்பது தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது.
படுமரத்து மோசிகீரனார். (பி-ம். படிமத்து மோசிகீரனார்). (பி-ம்) 3.சோனை, பூஞ்சுனை; 4.பொன்வலி, பாடிலி, பாடினி.
(ப-ரை.) பாண, காதலர் வரவு - தலைவரது வரவை, நீ கண்டனையோ - நீயே நின்கண்ணாற் கண்டாயோ? கண்டார் கேட்டனையோ - அன்றித் தலைவனைக் கண்டாரைக் கேட்டறிந்தாயோ? யார்வாய் கேட்டனை - அங்ஙனம் பிறர்பால் கேட்டனையாயின், யார் வாயிலாக்