வடமவண்ணக்கன் பேரிசாத்தன் (பி-ம். வடமவண்ணக்கர், வடமவண்ணக்கன்). (பி-ம்) 2. ‘பல்கிளை’ 3. ‘னிழந்து’ 5. ‘புலவுதிரைக்’ 7. ‘மடல்சழ்’, ‘பெண்ணையஞ்’.
(ப-ரை.) வெற்ப, இவள் - இத்தலைவியானவள், நின் சொல் கொண்ட என் சொல் - குறையுறும் நின்சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை, தேறி - தெளிந்து, பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை - பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, புது நலன் இழந்த - இதுகாறும் புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான, புலம்பு உடையள் - தனிமையையுடையள்; நிலவும் இருளும் போல - நிலவையும் அதனோடு நின்ற