பக்கம் எண் :


172


துணிந்த காலத்துத் தன்மேல் அன்பு நீங்கியதுணர்ந்து செவிலி கூறியது (தொல். களவு. 24, ந.); செவிலி கூற்று (தொல். செய். 190, பேர்; இ.வி. 562.)

    ஒப்புமைப் பகுதி 2. இனி: குறுந். 11:4, 153:3, 205:5; குறள். 1083; கலி. கட. 4; தஞ்சை. 20. மு. கலி. 14;9. செவிலி முயக்கம் தலைவிக்கு வெறுப்பைத் தருதல்; குறுந். 353:6-7.

    3. கழறொடி:குறுந். 1:3, ஒப்பு. கழறொடியாய்: புறநா. 374:16. மு. புறநா. 128:5.

    4. வேங்கை மணம் நாறுதல்: குறுந். 355:6, ஒப்பு. 3-4. பொதியில் வேங்கை: “வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின்மேற், றகையிண ரிளவேங்கை மலர்” (கலி. 57: 16-7). (பொருப்பு - பொதியின் மலை). 4-5. தலைவியின் மேனி மலர்களின் மணம் உடைமை: குறுந். 62:1-4, ஒப்பு. தலைவிமேனியின் நறுமையும் தண்மையும்: குறுந். 70:2, ஒப்பு

(84)
  
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணன், “ தலைவன் மிக்க அன்புடையன்” என்று பாராட்டியபொழுது தோழி, “இவன் சொல்லத்தான் அவரதன்பு புலப்படுகின்றது. மற்று அவர் செயலால் அறிந்திலம்” என்று கூறி வாயில் மறுத்தது.)
 85.    
யாரினு மினியன் பேரன் பினனே  
    
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் 
    
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர் 
    
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் 
5
நாறா வெண்பூக் கொழுதும் 
    
யாண ரூரன் பாணன் வாயே. 

என்பது வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி வாயின் மறுத்தது (பி-ம்.தோழி வாயின் மறுத்தது.)

வடமன் (பி-ம். வடமவண்ணக்கன்) தாமோதரன்.

    (பி-ம்) 3. ‘லிழையர்’

    (ப-ரை.) உள் ஊர் குரீஇ - ஊரினுள் இருக்கும் குருவியின், துள்ளு நடை சேவல் - துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, சூல் முதிர் பேடைக்கு - கருப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு, ஈன் இல் - பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை, இழைஇயர் - அமைக்கும் பொருட்டு, தேம் பொதி கொண்ட - தேன் பொதிதலைக் கொண்ட, தீ கழை கரும்பின் - இனிய கோலை உடைய கரும்பினது, நாறா வெண் பூ - மணம் வீசாத வெள்ளிய