பக்கம் எண் :


174


பயந்து பயன்படுங் குலமகளிரையும் ஒப்ப நினைப்பான் என்றவாறு’ என்றெழுதிய பகுதி இங்கே கருதற்குரியது.

    பாணன் பொய் கூறினன் ஆதலின் அவன்பால் வெகுட்சி உற்ற தோழி அவனை முன்னிலைப்படுத்திக் கூறுதலையும் விரும்பாளாகிப் படர்க்கையில் உணர்த்தினாள்.

    (மேற்கோளாட்சி) 2. பறவையின் ஆண்பாற்கெல்லாம் சேவலென்னும் பெயர் உரியது (தொல். மரபு. 48, பேர்).

    ஒப்புமைப் பகுதி 1. பேரன்பினன்: குறுந்.37:1, ஒப்பு. 4. தீங்கழைக் கரும்பு: மலைபடு. 119. கரும்பில் தேனடை இருத்தல்: “கரும்பிற் றொடுத்த பெருந்தேன்” (சிலப். 10:82); “அறையுறு கரும்பினணிமடற் றொடுத்த, நிறையுறு தீந்தேன்” (பெருங். 1.48:146-7); “தீங்கரும் பெருத்திற் றூங்கி யீயின்றி யிருந்த தீந்தேன்”, “கரும்பின்மேற் றொடுத்ததேன்” (சீவக. 712, 1936). 3-4. குருவிச் சேவல் இல் இழைத்தல்: “மனையுறை குரீஇக் கறையணற் சேவல், பாணர் நரம்பின் சுகிரொடு வயமான், குரற்செய் பீலியி னிழைத்த குடம்பை” (புறநா. 318:4-6.) 5. பூக் கொழுதுதல்: குறுந். 243:2. 4-5. கரும்பின் நாறாப்பூ: “நாற்றங் கொள்ளப்படாத கரும்பின் பூ’ (ஐங்.91, உரை); “தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி, தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு” (நாலடி. 199).

     கரும்பின் வெண்பூ: நற். 366:7-8; புறநா. 35:10. 2-5.குருவிச் சேவல் கருப்பம்பூவாற் பேடைக்கு ஈனில் இழைத்தல்: “கரும்பின், வேல்போல் வெண்முகை பிரியத் தீண்டி, முதுக்குறை குரீஇ முயன்றுசெய் குடம்பை” (நற். 366:7-9); ‘‘சூன்முதிர்துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல் செய்வான், தேன்முதிர் வேழத்தின் வெண்பூக் குதர் செம்மல் ஊரன்’’ (திருச்சிற். 369); “மனையுறை குருவி வளைவாய்ச் சேவல், சினை முதிர் பேடைச் செவ்வி நோக்கி, ஈனில் இழைக்க வேண்டியானா, அன்புபொறை கூரமென்மெல முயங்கிக், கண்ணுடைக் கரும்பினுண்டோடு கவரும், பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை, வருபுனலூரன்” (பதினோராந். திருவாரூர் மும்மணிக். 19).

     பறவைகள் பூவாற் கூடு கட்டுதல்: சீவக. 65.

(85)
  
(தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் யாமத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.)
 86.    
சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்  
    
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப் 
    
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந் 
    
தூதை தூற்றுங் கூதிர் யாமத் 
5
தானுளம் புலம்புதொ றுளம்பும் 
    
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே. 

என்பது ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.