பக்கம் எண் :


176


    தலைவர் இருத்தற்குரிய கூதிர் யாமத்தில் அவரைப் பிரிந்து இருப்பது எவ்வாறு என்று தலைவி இரங்கினாள்.

    (மேற்கோளாட்சி) 1. சிறை யென்பது தடுத்துக் காத்தலை யுணர்த்தும் (சீவக. 2890, ந.) மு. தனித்துழி இறைவி துனித்தழுதிரங்கல் (நம்பி. 205.)

    ஒப்புமைப் பகுதி 2. சேயரிக்கண்: ஐந். ஐம். 15. தலைவன் பிரிவினால் தலைவி அழுதல்: குறுந். 38: 4-5, ஒப்பு.

    2. பொறையருநோய்: “பொறைநில்லா நோயோடு” (கலி. 3:4) புலம்பலைக்கலங்கி: “நோயலைக் கலங்கிய” (நற். 94:1); நற். 44:2, ஐங்.77:2, 471:2. 3.பிறர்: குறுந். 246:5. தலைவி என்னைப் போலப் பிறரும் உளரோவென்றல்: நற். 104:8-12; அகநா. 202:9-15.

    4. ஊதை தூற்றும் யாமம்: “ஊதைகூட்டுண்ணு முகுபனியாமத்து” (நன்.349, சங். மேற்.) 3-4. உறையும் ஊதையும்: குறுந். 55:2-3, ஒப்பு.

    5-6. ஆன்மணி: மலைபடு. 573. 4-6.தலைவி யாமத்தில் ஆன்மணி யோசை கேட்டுத் துன்புறுதல்: குறுந். 190: 5-7, 279: 1-4.

(86)
  
(தலைவன் தெய்வங் காட்டிச் சூளுற்றுப் பின் பிரிந்து நீட்டித்தானாக, அத்தெய்வம் ஒறுக்குமோவென்று அஞ்சிய தலைமகள், “என்பால் உண்டான வேறுபாடுகளுக்குக் காரணம் தலைவர் கொடுமையன்று; என் மனநிலையேயாகும்” என்று கூறியது.)
 87.   
மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்  
    
கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதும் 
    
கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர் 
    
பசைஇப் பசந்தன்று நுதலே 
5
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.  

என்பது தலைமகள் தெய்வத்திற்குப் பராயது.

     (பராயது - வேண்டிக் கொண்டது; திருச்சிற்.235, கொளு, உரை.)

கபிலர்.

    (பி-ம்) 5. ‘ஞெகிழிய’.

    (ப-ரை.) மன்றம் மராத்த - பொதுவிடத்திலுள்ள மராத் தின்கண் தங்கும், பேஎம் முதிர் கடவுள் - பிறர்க்கு அச்சம் செய்தல் முதிர்ந்த தெய்வம், கொடியோர் - கொடுமை யுடையாரை, தெறூஉம் என்ப - வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர்; எம் குன்று கெழு நாடர் - குன்றுகள் பொருந்திய நாட்டையுடைய எம் தலைவர், யாவதும் கொடியர் அல்லர் - சிறிதும் அத்தெய்வத்தால் ஒறுத்தற்குரிய கொடுமையை யுடையரல்லர்; நுதல் பசைஇ பசந்தன்று - என்நெற்றி நான் அவரை விரும்பியதனால் பசலை பெற்றது; ஞெகிழ -