யுடன், கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார்” (சூளா. சுயம்வரச். 106); “மனையளகு, வள்ளைக் குறங்கும் வளநாட” (திருவள்ளுவ. 5); “வள்ளை வெள்ளை நகையார்” (திருச்சிற். 221.); மலைபடு. 360; கல்.42.
2. மாக்கள்: குறுந். 6:2, ஒப்பு. ஏதின் மாக்கள்: புறநா.58:27. நுவறலு நுவல்ப: குறுந்.37:1, ஒப்பு.
3. பேதையூர்: குறுந். 159:7, 276:7-8.
4-6. கொல்லிமலையில் தெய்வம் எழுதிய பாவை: “பொறையன், உரைசா, லுயர்வரைக் கொல்லிக் குடவயின், .... நெடுவரைத் தெய்வ மெழுதிய, வினைமாண் பாவை யன்னோள்”, “பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப், பூதம் புணர்த்த புதிதியல் பாவை, விரிகதிரிளவெயிற் றோன்றி யன்னநின்” (நற். 185:6-11, 192: 8-10); “பொறையன் கொல்லி, ஒளிறுநீ ரடுக்கத்து வியலகம் பொற்பக், கடவு ளெழுதிய பாவையின், மடவது மாண்ட மாஅ யோளே”, “கொல்லி, நிலைபெறு கடவுளாக்கிய, பலர்புகழ் பாவை யன்னநின் னலனே” (அகநா. v62:13-6, 209:15-7); ‘தெய்வப்பாவை - தெய்வத்தாற் செய்த கொல்லிப் பாவை’ (சீவக. 657, ந.):கொல்லிப்பாவை: நற். 201:5-11; கலி.56:7, ந. சிலப்.6:61, அடியார்.சீவக.197, 667, ந.
7. மெல்லியல்: குறுந். 70:5, 137:1. தலைவியைக் குறுமகள் என்றல்: குறுந். 70:1, 95:3, 101:5, 189:6, 267:5, 276:1, 280:3, 295:5.
(89)
(தலைவன் வரையாமல் நெடுங்காலம் தலைவியோடு பழகியபோது ஒருநாள் அவன் வேலிப்புறத்திலே வந்துநிற்ப அவன் கேட்கும்படி தலைவியை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவனது கேண்மையினால் நின் மேனிக்கு வாட்டம் நேர்ந்ததேனும் நீ அன்பிற் குறைந்தாயல்லை” என்று தலைவியின் நிலையைத் தோழி புலப்படுத்தியது.) 90. | எற்றோ வாழி தோழி முற்றுபு |
| கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய |
| மங்குன் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க் |
| கலைதொட விழுக்கிய பூநாறு பலவுக்கனி |
5 | வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம் |
| குன்ற நாடன் கேண்மை |
| மென்றோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே. |
என்பது வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன். (பி-ம்) 3. ‘மருங்குன்’ 4.’பலவுக்கனியினைவரை’ 5.’யுண்டுறை’ 7.’சால்பின் றன்றே’