பக்கம் எண் :


185


இல்லத்தின்கண் அவளையும் விருந்தோம்பல் முதலிய அறம்புரியச் செய்வித்தற்குரியனென்பது குறிப்பு.

    (மேற்கோளாட்சி) மு. ‘கேண்மை தோளை மெலிவித்ததாயினும் எனக்கு அமைதியைத் தந்தது; யான் ஆற்றவும், தான் மெலிதல் பொருந்தாதது எத்தன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க; கலைதீண்ட வழுக்கி வீழ்ந்த பழத்தை அருவி பின்னும் பயன்படுத்தும் நாடன் என்ற தனானே அலரால் நம் சுற்றத்திற் பிரிந்தேமாயினும் அவன் நம்மை வரைந்து கொண்டு இல்லறம் செய்வித்துப் பயன்படுத்துவனென்பதாம்’ (தொல். பொருள். 9, ந.)

     (கு-பு.) இதனால் நச்சினார்க்கினியர் இச்செய்யுளைத் தலைவி கூற்றாகக் கொண்டாரென்று தெரிகிறது; அது சிறப்புடையது.

    ஒப்புமைப் பகுதி 2. கறிவளர் அடுக்கம்: குறுந். 288:1, நற்.151:7. கலி. 52:17

    4. மழைவீழ்தல்: பெரும்பாண். 363; அகநா.182:9-10, 323:13, 64:1-2.

     கலைதொட்ட பலவுக்கனி: குறுந்.342:1, 373:4-6.

    4-5. அருவி பலாப்பழத்தைக் கொணர்தல்: “ஆசினி முதுசுளை கலாவ.... இழுமென விழிதரு மருவி” (முருகு.301-16); “அருவி தந்த பழஞ்சிதை வெண்காழ்” (மலைபடு. 174)

    2-5. இரவில் மழைபெய்தலால் அருவி உண்டாதல்: குறுந். 42:1- 3, ஒப்பு.

    7. தோள் மெலிதல்: குறுந். 87:5, ஒப்பு.

    6-7. தலைவன் கேண்மை மெலிவித்தும் சால்புடையதாதல்: குறுந். 264:4-5; நற். 136:7-9.

(90)
  
(பரத்தையரிடம் சென்று மீண்டுவந்த தலைவன் தலைவியினது உடம்பாட்டை வேண்டி நின்றவிடத்து அவன்பால் ஊடலையுடைய வளாயினும் தன் நெஞ்சம் அவன்பாற் செல்வதையறிந்த தலைவி, “நீ அவன்பால் அன்புடையையாகி இருப்பின் பலநாள் துஞ்சாதுறையும் துன்பத்தையடைவாய்” என்று கூறியது.)
 91.    
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி  
    
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம் 
    
தண்டுறை யூரன் பெண்டினை யாயிற் 
    
பலவா குகநின் னெஞ்சிற் படரே 
5
ஓவா தீயு மாரி வண்கைக் 
    
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி  
    
கொன்முனை யிரவூர் போலச்  
    
சிலவா குகநீ துஞ்சு நாளே.