பக்கம் எண் :


191


தலைவன் முனிந்த உள்ளத்தினாங் கொல்லோவென ஐயுற்று அவனது குறிப்பை அறிதல் வேண்டியும், தனது நெஞ்சில் நிறைந்து நின்ற ஊடல் கையிகந்து துனியாகிய வழி இஃது அவற்கு எவனாங் கொல்லென அஞ்சிய வழியும் தலைவி தலைவனோடு அயன்மையுடைய சொல்லைத் தோற்றுவிக்கவும் பெறும்; ‘நன்னலம்... கடையே’ என்பதனுள், அவரை அன்பிலை கொடியை யென்னாதி, அன்பில்வழி நின்புலவி அவரை என்செய்யும்? அவர் நமக்கு இன்றியமையாத எமரல்லரோ வென இருவகையானும் அயன்மை கூறியவாறு காண்க’ (தொல். கற்பு. 18, ந.)

 4 
“நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியும்  
  
 காதல ரில்லா வழி” 
  
“நீரு நிழல தினிதே புலவியும் 
  
 வீழுநர் கண்ணே யினிது”                         (குறள். 1308-9)  
(93)
  
(தலைவன் மீள்வதாகக் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததையறிந்த தோழி, ‘தலைவி இதுகண்டு ஆற்றாள்’ என வருந்தினாளாக அதனையறிந்த தலைவி, “இன்னும் கார்ப்பருவம் வரவில்லை; ஆயினும் மேகம் முழங்கு கின்றது; நான் ஆற்றுவேன்; தலைவர் இது கேட்டு வினைமுடியாமல் மீள்வரோவென்றே அஞ்சினேன்” என்று கூறியது.)
 94.    
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்  
    
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே 
    
யானே மருள்வேன் றோழி பானாள் 
    
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும் 
5
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே  
    
அருவி மாமலைத் தத்தக்  
    
கருவி மாமழைச் சிலைதருங் குரலே.  

என்பது பருவங்கண்டு ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.

கந்தக் கண்ணன் (பி-ம். கதக் கண்ணன்)

    (பி-ம்) 4.’கேட்டிற்’; 6. ‘மலைத்தக்க’.

    (ப-ரை.) தோழி-----, பெரு தண் மாரி - பெரிய தண்மை யையுடைய மழைக்காலத்துக்குரிய, பேதை பித்திகத்து அரும்பு - அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள், முன்னும் மிக சிவந்தன - தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன; யானே மருள்வேன் - அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்; ஆயினும், பிரிந்திசினோர் - என்னைப் பிரிந்திருப்பவராகிய, இன்னும் தமியர் - இன்னும் என்பால்