பொருட்பால் உறுப்பியல் அதிகாரம் 92. வரைவின் மகளிர் அஃதாவது.இல்லறம் புகாதும், கற்பைக் காவாதும், அழகு, துப்புரவு, புனைவு, முத்தமிழ்க் கலை முதலியவற்றால் ஆடவரை மயக்கி, வெளிப்படையான கொடிய நோயும் துப்புரவில்லாது தீநாற்றம் வீசும் அருவருப்பான தோற்றமு மில்லாத ஆடவர்க் கெல்லாம், குலமத பருவ நிலைமை வேறுபாடின்றித் தம் நலத்தைப் பொருட்கு விற்கும் பொது மகளிர் தொடர்பு.பலரொடும் வரையாது கூடுதலால் வரைவின் மகளிர் எனப்பட்டனர்.இத்தொடர்பும் பொருளீட்டுதற்குத் தடையாய்ப் பகைபோல்வதாலும், மணந்தமனைவிக்கு அடங்கி நடப்பதினுங் கேடு விளைத்தலாலும், பெண்வழிச் சேறலின் பின்வைக்கப்பட்டது. |