95. மருந்து |
941. | மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் |
| வளிமுதலா எண்ணிய மூன்று. |
|
வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். |
942. | மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய |
| தற்றது போற்றி உணின். |
|
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை. |
943. | அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு |
| பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. |
|
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் வாழ்வதற்கு வழியாகும். |
944. | அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல |
| துய்க்க துவரப் பசித்து. |
|
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும். |
945. | மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின் |
| ஊறுபா டில்லை உயிர்க்கு. |
|
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை. |