பக்கம் எண் :

10உதயணகுமார காவியம் [ உஞ்சைக் காண்டம்]


பெரிய துயரத்தையும் விடுத்து மகிழ்ந்திருப்ப, அவ்வழியே நீராடச் சென்ற அவளுடைய நல்ல தந்தையாகிய அச்சேடக முனிவன் அவளைக் கண்டு அவ்விடத்திற்குவந்து சேர்ந்தான் என்க. (12)

மகவிற்குப் பெயரிடல்

17. தவமுனி கொண்டு சென்று

தாபதப் பள்ளி சேர்த்தி

அவணினி தோம்ப வப்பா

லருக்கன துதய காலத்

துவமையின் றுதித்தா னாம

முதயண னாக வென்றார்

இவணமத் தாயுஞ் சேயு

மிருடிபா லிருந்தா ரன்றே.

(இ - ள்.) தவவொழுக்கத்தையுடைய தந்தையாகிய சேடக முனிவர் மிருகாபதியை மகவுடனே அழைத்துச் சென்று தாம் வதிகின்ற தவப்பள்ளியின்கண் சேர்த்தி அப்பள்ளியிடத்தேயே இனிதாகப் பாதுகாவாநிற்ப, ஆங்குறையும் துறவோர்கள் “இவன் ஞாயிறு தோன்றும்பொழுது பிறந்தமையாலே இவன் பெயர் ‘உதயணன்’ என்று வழங்குவதாக” என்று பெயரிட்டு வாழ்த்தினர். இவ்வண்ணமாக அந்தத் தாயும் பிள்ளையும் அத் துறவோர் பள்ளியின்கண் உறைவாராயினர் என்க. (13)

உதயணன் பெற்ற பேறுகள்

18. பிரமசுந் தரயோ கிக்குப்

பிறந்தவன் யூகி யோடும்

இருவரும் வளர்ந்தே யின்பக்

கலைக்கட னீந்திக் கானக்

கரிணமும் புள்ளு மற்றுங்

கண்டடி வீழுங் கீதப்

புரந்தரன் கொடுத்த யாழும்

பொறைமுனி யருளிற் பெற்றான்.

(இ - ள்.) சேடக முனிவருடைய தவப்பள்ளியிலிருந்த உதயணன் பிரமசுந்தர முனிவருடைய மகனாகிய யூகி என்பானோடு நட்புக் கிழமை பூண்டு அவனும் தானுமாகிய இருவரும் இனிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்பமிக்க கலைகளாகிய கடலை நீந்திக் கரை கண்டிருக்கும் பொழுது உதயணன், காட்டின்கண் வாழ்கின்ற யானையும் பிறவுமாகிய விலங்கு