பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்103


மானனீகை வருதல்

228. அருவரு மேற்பா ரின்றி

யோர்ந்தவ ணெஞ்சங் கூர்ந்து

திருநுதன் மாது நொந்து

சிறப்பின்றி யிருந்த போழ்தின்

மருவுகோ சலத்து மன்னன்

மகளுரு வரிவை நாமம்

சுரிகுழன் மான னீகை

சொலற்கருங் கற்பி னாளே.

(இ - ள்.) பதுமாபதியின் தோழியாகிய ஆரியை மூவாயிரங்கை இடையறாது அடித்து நிறுத்திய பின்னர் ணாற்றாராகிய வாசவதத்தை தோழிமார் குழுவினுள் அப்பந்தினை ஏற்று ஆடத்துணிவார் யாருமில்லை யாகவே அரசனை யுணர்ந்த அழகிய நுதலையுடைய வாதவதத்தை மனங்குன்றி பொலிவிழந்து வாளா விருந்துழி, வளம்பொருந்திய கோசலநாட்டு மன்னன் மகளும் கரிந்த கூந்தலையுடையவளும் உருவத்தாற் சிறந்தவளும் ‘மானனீகை’ என்னும் பெயரை யுடையவளும் புகழ்தற்கரிய கற்பினையுடையவளும் என்க. (43)

இதுவுமது

229. இளம்பிறை நுதல்வேற் கண்ணி

யினியவிற் புருவ வேய்த்தோள்

இளங்கிளி மொழிநற் கொங்கை

யீடில்பொற் கலச மல்குல்

இளமணிப் படம்பொன் வாழை

யிருகுறங் காலம் பண்டி

இளம்புற வடிக ளாமை

யிடைமின் பூங் குழலி னாளே.

(இ - ள்.) இளம்பிறை போன்ற நுதலையுடையவளும் வேல் போன்ற கண்ணையுடையவளுங் காண்டற்கினிய விற்போன்ற புருவமுடையவளும் மூங்கில்போன்ற தோள்களையுடையவளும் இளைய கிளிபோலும் மழலை மொழியுடையவளும் ஒப்பற்ற பொன்னாலியன்ற கலசங்களை ஒத்த அழகிய முலைகளை யுடையவளும் மணி