மானனீகையின் பந்துகளின் செலவு வகைகள்
234. காந்தணன் ஒருமுன் கைக் கன்னியன் விரலினின்
ஏந்தினளெ டுத்தடிக்க விறைவளை யொலிவிடப்
போந்தன விசும்பினும் பொங்குநன் னிலத்தினும்
சூழ்ந்துகந் தெழுந்தன சூறாவளிக் ளென்னவே.
(இ - ள்.) செங்காந்தள் மலர்
போன்ற நறிய முன்கையையுடைய கன்னிகையாகிய அம்மானனீகை
தன் அழகிய விரலாலே பந்தினை ஏந்தி எடுத்து அடிக்குங்
காலத்தே அவள் முன் கையின் வளையல்கள் முரலவும்,
அப் பந்துகள் விசும்பினும் சென்றன. நல்ல நிலத்தின்கண்
மோதி நான்கு திசையினும் சூறைக் காற்றே போற்
கழன்றுயர்ந்து மீண்டும் வானத்தே உயர்ந்துஞ் சென்றன
என்க. உகந்து - உயர்ந்து. (49)
பந்தாடுங்காலத்து மானனீகையின் நிலைமை
235. சிலம்புகிண் கிணிசில சீர்க்கலன்க
ளார்ப்பவும்
வலம்புரி மணிவடம் வளரிள முலைமிசை
நலம்பெற வசைந்திட நங்கைபத் தடித்திடப்
புலம்புவண்டு தேனினம் பூங்குழன்மே லாடவே.
(இ - ள்.) அவள் பந்தாடும் பொழுது அவள்
சிலம்புகளும் கிணகி்ணிகளும் சில சிறந்த பிற வணிகலன்களும்
ஆரவாரிப்பவும், வலம்புரி யீன்ற முத்துமாலையானது
வளருகின்ற இளமுலைமேற் கிடந்து அழகுண்டாக அசையா நிற்பவும்
இசை முரலுகின்ற வண்டினமும் தேனினமும் அழகிய கூந்தன்மே
லாடாநிற்பவும் பந்துகளைப் புடைத்தனள் என்க. (50)
மானனீகையின்பால் உதயணன் காதல் கோடல்
236. பாடகச்சி லம்பொலி பண்ணினு மினிதெனச்
சூடகத் தொலிநல சுரருடைய கீதமே
ஆடகம ணித்தொனி யரசுளங் கவர்ந்துடன்
கூடகம னத்தினற்கு மரனினிய னாயினன்.
(இ - ள்.) இவள் பந்தாட்டங் கண்டு நின்ற
நல்லோனாகிய உதயண குமரனுக்கு அவளடியிலணிந்த சிலம்பொலி
பண்ணொலியினும் காட்டில் இனிதாகப் பொன்மணி யணிகலன்கள்
ஒலியும் கைவளையலின் ஒலியும் தேவ கீதங்களே ஆயின;
இவ்வாற்றால் அரசனாகிய அவன் மனம் பெரிதும்
கவரப் பட்டு அவளோடு கூடும்
|