பக்கம் எண் :

110உதயணகுமார காவியம் [நரவாகன காண்டம்]


ஐந்தாவது

நரவாகனகாண்டம்

வாசவதத்தை வயிறு வாய்த்தல்

242. எத்திக்கு மடிப்ப டுத்தி

யெழில்பெறச் செங்கோல் செல்லும்

பெற்றிசெய் வேந்தன் றன்னைப்

பெருமைவேற் றானை மன்னை

வித்தைசெய் சனங்கண் மாந்தர்

வியந்தடி வணங்க மின்னும்

முற்றிழை மாலைத் தத்தை

முனிவில்சீர் மயற்கை யானாள்.

(இ - ள்.) இவ்வாறு எல்லாத் திசைகளிலுமுள்ள நாட்டையெல்லாம் வென்று தன் அடிப்படுத்திக்கொண்டு தனதுசெங்கோன் முறை தடையின்றி யாண்டுஞ் செல்லும் வண்ணம் அரசாட்சி செய்கின்றவனும் பெருமை மிக்க படைகளையுடையவனுமாகிய உதயண வேந்தனைக் கலைவாணர்களும் குடிமக்களும் வியந்து அடிவணங்கி வாழ்த்தாநிற்ப ஒளிவீசும் நிறைந்த அணிகலன்களையும் மலர்மாலையினையும் அணிந்த கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தை விரும்பத் தகுந்த சிறப்பையுடைய வயா நோயுற்றனள் என்க. மகப்பேற்றிற்குக் காரணமாதலின் மயற்கையை ‘முனிவில் சீர் மயற்கை’ என்றார். மயற்கை - மசக்கை; வயாநோய். (1)

வாசவதத்தையின் வயாவிருப்பம் அறிதல்

243. நிறைபுகழ் வனப்பு நங்கை

நிலவிய வுதரந் தன்னுட்

பிறையென வளரச் செல்வன்

பேதையும் விசும்பிற் செல்லும்

குறைபெறு வேட்கை கேட்ட

கொற்றவன் மனத்தி னெண்ணி

அறைபுக ழமைச்சர் தம்மை

யழைத்தனன் வினவி னானே.

(இ - ள்.) உலகெல்லாம் நிறைந்த பெரும்புகழையும் பேரழகையும் உடைய பெருந்தகையாளாகிய வாசவதத்தையின் வயிற்றின்கட்