பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்113


உத்தரஞ் சொல்க வென்ன

வொளியுமி ழமரன் கேட்கச்

சித்திரப் பாவை வானிற்

செலவினை வேட்டா ளென்றான்.

(இ - ள்.) “யான் நினக்குற்ற நண்பன் என்று கருதி என் வருகையை விரும்பி முன்பு என்னை நினைத்திலையல்லையே? திருமகள் வீற்றிருக்கும் அழகிய மார்பினையுடைய அரசே! இற்றைநாள் என்னை நினைத்த இந்தப் புதுமைக்குக் காரணம் என்னையோ? இதற்கு விடை கூறுக” என்று ஒளிவீசும் மேனியையுடைய அத்தேவன் வினவ, அதுகேட்ட உதயணகுமரன் நண்பனே! இற்றைநாள் ஓவியத்தெழுதிய பாவைபோல்வாளாகிய வாசவதத்தை வயாவினாலே வானிலே செல்லும் செலவினை விரும்பினாள் (இதுவே காரணம்)’ என்று கூறினன் என்க. (6)

இதுவுமது
உதயணன் கூற்று

248. எங்களிற் கரும மாக்கு

மியல்புள் தீர்த்துக் கொண்டோம்

திங்களின் முகத்திற் பாவை

செலவுநின் னாலே யன்றி

எங்களி லாகாதென்றிப்

பொழுதுனை நினைந்தே னென்ன

நன்கினி யமரன் கேட்டு

நரபதி கேளி தென்றான்.

(இ - ள்.) பின்னரும் அப்பெருந்தகை கூறுவான் “அன்பனே! .யாங்களே செய்து முடிக்கும் இயல்புடையனவாகிய செயல்களை யாங்களே செய்து முடித்துக் கொண்டோம்; திங்கள் போன்ற திருமுகமுடைய என் தேவி வயா விருப்பத்தால் வானிலேறப் பறக்க நினைக்கின்ற இக்காரியம் நின்னுதவியாலாவதன்றி யாங்களே செய்து கோடற்குரிய தொன்றல்லாமையாலே இப்பொழுது உன்னை நினைத்தேன் காண்!” என்றுகூற இதனை அத்தேவன் நன்கு கேட்டு, வேந்தே! இனி யான் கூறுவதனைக் கேட்பாயாக!‘ என்று கூறினன் என்க. (7)

உத--8